இப்படியா செய்வார் பிரசாந்த்...சமூக வலைதளமே அலறுதே
சென்னை : பிரபல நடிகரும் இயக்குனருமான தியாகராஜனின் மகன் பிரசாந்த். இவர் 1990 ம் ஆண்டு, வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாகவும், நடிகராகவும் அறிமுகமானார். இவர் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி ஏராளமான படங்களில் நடித்து, முன்னணி நடிகராக இருந்தவர். இவர் நடித்த செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, தமிழ், வின்னர், மஜ்னு, பார்த்தேன் ரசித்தேன், திருடா திருடா உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.

3 ஆண்டுகளாக நடிக்காத பிரசாந்த்
2019 ம் ஆண்டு வினய விதயா ராமா என்ற தெலுங்கு படத்திற்கு பிறகு படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார். தமிழில் 2018 ல் ஜானி என்ற படத்தில் நடித்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் பிரசாந்த்.

விறுவிறுப்பான அந்தகன் சூட்டிங்
நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் நடிக்கும் படத்தை அவரது தந்தை தியாகராஜனே இயக்குகிறார். அந்தகன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயக்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பரபரப்பை கிளப்பிய பிரசாந்த்
இதற்கிடையில் ஏப்ரல் 6 ம் தேதி தனது பிறந்தநாளை பிரசாந்த் கொண்டாடி உள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு, பேஸ்புக்கில் தான் பேட்டி அளித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் தனது திரையுலக பயணம், ஷங்கர், மணிரத்னம், செல்வமணி போன்ற டாப் டைரக்டர்களுடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் பேசி உள்ளார்.

வைரலாகும் வீடியோ
ஆனால் இந்த பேட்டி, 1998 ம் ஆண்டு எடுக்கப்பட்டது. கிட்டதட்ட 23 ஆண்டுகள் கழித்து பிரசாந்த் பகிர்ந்த இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. லைக்குகளுடன், பிரசாந்த்திற்கு வாழ்த்து தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதிகம் பகிரப்படும் இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











