அதே குரல்.. அதே கனிவு - 39 வருடங்களுக்கு பிறகு பாடகியுடன் இணைந்த வைரமுத்து

சென்னை: பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய பாடலை 39 வருடங்களுக்கு பிறகு பாடகி சித்ரா பாடியிருக்கிறார். இதனை வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் பாடலாசிரியர்களில் வைரமுத்து முக்கியமானவர். கண்ணதாசன்,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி ஆகியோர் வரிசையில் வைரமுத்துவும் ஒரு மிகப்பெரிய லெஜண்ட் ஆவார்.

புதுமையை புகுத்திய பாடலாசிரியர் வைரமுத்து

புதுமையை புகுத்திய பாடலாசிரியர் வைரமுத்து

பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தின் அறிமுகமானவர் வைரமுத்து. இளையராஜா இசையில் இது ஒரு பொன்மாலை பொழுது என்ற பாடலை முதல்முதலாக எழுதினார் வைரமுத்து. முதல் பாடலிலேயே வானம் எனக்கொரு போதி மரம் என புதுமையாக எழுதி இளையராஜாவின் மனதிலும், ரசிஅக்ர்களின் மனதிலும் ஆழமாக தனது தடத்தை பதித்துவிட்டார்.

இளையராஜாவுடன் கூட்டணி அமைத்த வைரமுத்து

இளையராஜாவுடன் கூட்டணி அமைத்த வைரமுத்து

அந்தப் பாடலுக்கு பிறகு இளையராஜாவின் ஆஸ்தான பாடலாசிரியராகிவிட்டார் வைரமுத்து. அதிலும் பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி கோலிவுட்டில் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தின. அவர்கள் இணைந்த முதல் மரியாதை, மண் வாசனை, கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்களின் பாடல்கள் அனைத்துமே க்ளாசிக் ரகத்தை சேர்ந்தவை. அதேபோல் இளையராஜாவும், வைரமுத்துவும் இணைந்து கொடுத்த மற்ற பாடல்களும் அந்த ரகத்தை சேர்ந்தவைதான்.

உடைந்து போன இளையராஜா - வைரமுத்து கூட்டணி

உடைந்து போன இளையராஜா - வைரமுத்து கூட்டணி

ஆனால் யார் கண் பட்டதோ இளையராஜா - வைரமுத்து கூட்டணி உடைந்துபோனது. அதற்கான காரணம் தெளிவாக தெரியாவிட்டாலும் இருவரையும் மீண்டும் இணைத்துவிட வேண்டுமென பலர் முயன்றனர். ஆனால் இன்றுவரை இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து, "நாங்கள் இருவரும் இணைந்து பழையபடி பாடல்களை கொடுத்தால் ரசிகர்களை புதுமையை எதிர்பார்ப்பார்கள்; தற்போதைய புதுமைப்படி பாடல்களை கொடுத்தால் இவர்களுடைய பழைய ஸ்டைல் எங்கே போயிற்று என கேட்பார்கள். எனவே இந்த சிக்கல் வராமல் இருப்பதற்கு நாங்கள் இணைந்து பணியாற்றாமல் இருப்பதுதான் நல்லது"என கூறியிருந்தார்.

ஜிவி பிரகாஷுடன் இணைந்த வைரமுத்து

ஜிவி பிரகாஷுடன் இணைந்த வைரமுத்து

இளையராஜாவுடனான பிரிவுக்கு பிறகு தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி பல பாடல்களையும் கொடுத்து தேசிய விருதுகளையும் வென்றுவிட்டார் வைரமுத்து. தற்போது அவர் ஜிவி பிரகாஷுடன் இணைந்திருக்கிறார். ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய வைரமுத்து இப்போது தங்கர்பச்சான் இயக்கத்தில் ஜிவி இசையில் உருவாகும் கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தில் பாடல் எழுதியிருக்கிறார். இதனை பாடகி சித்ரா பாடியிருக்கிறார்.

39 வருடங்களுக்கு பிறகு பாடகியுடன் இணைந்த வைரமுத்து

39 வருடங்களுக்கு பிறகு பாடகியுடன் இணைந்த வைரமுத்து

வைரமுத்து எழுதிய பாடலை 39 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வைரமுத்து கூறுகையில், "39 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய பூஜைக்கேத்த பூவிது பாடலை பாடிய அதே பாடகி சித்ராவை பாடல் பதிவில் சந்தித்தேன். அதே குரல். அதே கனிவு, அதே பணிவு" என குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X