8 வருடங்கள் ஆகியும் அன்பு குறையாத "நீர்பறவை".. பாராட்டிய ரசிகர்கள்... சீனு ராமசாமி மகிழ்ச்சி!

சென்னை : இயக்குனர் சீனு ராமசாமியின் நீர்பறவை படம் கேடிவியில் ஒளிபரப்பப்பட்டது, இந்த நேரத்தில் பெரிய அளவிலான அன்பை இணையத்தின் வாயிலாக சீனு ராமசாமிக்கு ரசிகர்கள் கொடுத்துள்ளனர்.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் 2012ல் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்த படம் தான் நீர்பறவை. படத்தில் விஷ்ணு விஷால், சுனைனா, சமுத்திரகனி, நந்திதா தாஸ், சரண்யா மற்றும் அனுபமா குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருப்பார்கள்.

 After 8 years, fans admire the film Neerparavai

விஷ்ணு விஷாலுக்கு அவரது சினிமா கெரியரில் மிக முக்கியமான படம் இது. குடிகார இளைஞனாக ஊர்சுற்றி திரியும் விஷ்ணு சுனைனாவை மணந்த பின் பொறுப்புள்ள கணவனாக மீனவனாக மாறுவார் இதன் பின் ஏற்படும் விஷ்ணுவின் மரணத்தை தாங்க முடியாத சுனைனா தன் காதல் கணவனை வீட்டிலேயே புதைத்து வைத்து விடுவாள். இந்த கதை பிளாஸ்பேக்காக வயதான 'நந்திதா தாஸின்' பார்வையில் இருந்து சொல்லபடும்.

மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய காதல் படமாக அப்போது பார்க்கப்பட்டது என்றே சொல்லலாம் ஆனால் படம் வெளியாகி தற்போது 8வருடங்கள் ஆகின்றது. செவ்வாய் அன்று கேடிவியில் ஒளிப்பரப்பிய போது இந்த படம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இணையத்தில் பேச வைத்துள்ளது.

மற்ற ரசிகர்களை போலவே தொலைகாட்சியில் படம் பார்த்து கொண்டிருந்த சீனு ராமசாமி படம் பார்த்து விட்டு இணையத்தில் நேரத்தை சற்று செலவிடலாம் என வந்திருக்கிறார். ட்விட்டர் முழுக்க ரசிகர்கள் நீர்பறவை படத்தை பற்றி பேசி படக்குழுவினருக்கும் டேக் செய்து இருக்கின்றனர். இதனை பார்த்த சீனு ராமசாமி நெகிழ்ந்து போயுள்ளார்.

 After 8 years, fans admire the film Neerparavai

இதை பற்றி ட்விட்டரில் சீனு ராமசாமி பகிரும் போது கேடிவியில் நீர்ப்பறவை பார்த்து நள்ளிரவில் ட்விட்டரில் வந்தது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், படம் வந்து 8 வருடங்கள் கடந்த நிலையில் இவ்வாழ்த்துக்களால் உள்ளத்தில் நம்பிக்கை ஒளிர்கிறது,அன்பும் நன்றியும் என்று கூறி இந்த ட்விட்டை படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி மற்றும் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் சுனைனாவிற்கு டேக் செய்து இருக்கிறார்.

ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இயக்குனர் சீனு ராமசாமி இதை போன்று வாழ்வில் நடக்கும் பல விஷயங்களை ட்விட்டர் வாயிலாக பகிர்ந்து வருகிறார். ரசிகர்களும் இதை பாராட்டி சீனு ராமசாமி பதிவிட்டு வரும் பல போஸ்டுகளுக்கு தங்களின் அன்பை காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X