twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எட்டு ஆண்டுகளுக்கு பின்பு நேருக்கு நேராக விஜய் உடன் மோதும் கார்த்தி

    |

    சென்னை: எட்டு ஆண்டு இடைவெளிக்கு பின்பு விஜய் நடிக்கும் பிகில் படமும், கார்த்தி நடிக்கும் கைதி படமும் தீபாவளி தினத்தன்று வெளியாக இருப்பது, இரு தரப்பு ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்த காவலன் படமும் கார்த்தி நடித்த சிறுத்தை படமும் இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டில் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டன. அதன் பின்னர் இரண்டு பேரும் நடித்த படங்கள் நேருக்கு நேர் மோதியதில்லை.

    1980 மற்றும் 1990களில் எல்லாம் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், மோகன், கார்த்திக் போன்ற முன்னணி நாயகர்கள் நடித்த படங்கள் எல்லாமே தீபாவளி, பொங்கல் போன்ற விஷேச நாட்களில் தான் அதிக அளவில் வெளியாகும். இதனால் இந்த படங்களைப் பற்றி ரசிகர்களிடமும் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த படங்களின் வசூலும் எக்குத் தப்பாக இருக்கும் என்பதோடு, பெரும்பாலான படங்கள் குறைந்த பட்சமாக 100 நாட்கள் முதல் 150 நாட்களும், சில படங்கள் வெள்ளி விழா படங்களாகவும் அமையும். அதெல்லாம் ஒரு கனாக்காலம்.

    காலப்போக்கில் இந்த நிலை மாறத் தொடங்கியது. இப்போது திரையுலகில், போட்டி அதிகமாகி விட்ட காரணத்தால் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களும் சரி, பிற நடிகர்கள் நடித்த படங்களும் சரி, படம் தயாராகி முடித்த உடனே வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை வெளியாகி ஒரு வாரம் வரை நல்ல வசூலை தருகிறது.

    பட வெற்றிக்கு பார்ட்டி

    பட வெற்றிக்கு பார்ட்டி

    இன்றைய கால கட்டத்தில் ஒரு படம் அதிகபட்சமாக 30 நாட்கள் வரை ஓடினாலே அந்தப் படம் 200 நாட்கள் ஓடியதற்கு சமமாக கருதி அதற்கு பார்ட்டி வேறு வைத்து கொண்டாடி தீர்க்கிறார்கள். இதற்கு நடுவில் கிடைத்த கேப்பில் பிற நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாக எதிர்பார்த்த வசூலை தராமல் விரைவிலேயே தியேட்டரை விட்டு காணாமல் போய்விடுகிறது.

    தியேட்டரை விட்டு ஓடும் படங்கள்

    தியேட்டரை விட்டு ஓடும் படங்கள்

    இதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டாம் நிலை நாயகர்கள் நடிகர்கள் நடிக்கும் படங்களும், ஒரே நடிகர் நடித்த இரண்டு அல்லது மூன்று படங்களும் அடுத்தடுத்த ரிலீஸுக்கு காத்திருப்பதால் தான், பிற நடிகர்கள் நடித்த படங்கள் சீக்கிரமே தியேட்டரைவிட்டு காணாமல் போகின்றன. இதில் எத்தனையோ நல்ல கதையம்சம் கொண்ட படங்களும் அடங்கும். இதனால் எத்தனையோ தயாரிப்பாளர்கள் காணாமல் போன கதையும் நடப்பதுண்டு. இதைத்தான் தண்டகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் குறிப்பிட்டு பேசி ஆதங்கப்பட்டார்.

    ஒரே நடிகரின் படங்கள்

    ஒரே நடிகரின் படங்கள்

    உதாரணத்திற்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்த 100 சதவிகிதம் காதல் படமும், ஐங்கரன் படமும் ஒரே நாளில் வெளியாகிறது. இதற்கு அடுத்த நாளிலேயே இவர் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை படமும் வெளியாகிறது. இதனால் மற்ற நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாவதில் தாமதமாகிறது.
    இதில் பாராட்டப்படவேண்டிய அம்சம் என்னவென்றால், அஜீத், விஜய், போன்ற முன்னணி நடிகர்கள் இருவருமே விட்டுக்கொடுத்து படங்களை வெளியிடுகின்றனர். இருவரின் படங்களுமே நேரடியாக ஒரே நாளில் மோதிக்கொள்வதில்லை. ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டு படங்களை வெளியிடுகின்றனர்.

    தல - தளபதி

    தல - தளபதி

    கடந்த ஆண்டு தீபாவளியன்று தளபதி விஜய் நடித்த சர்கார் படம் வெளியானது. அதேபோல், தல அஜீத் குமார் நடித்த விஸ்வாசம் படம் இந்த ஆண்டு பொங்கல் அன்று வெளியானது. இதனால் இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்து படைத்தது போல் ஆகிவிட்டது. மேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி வசூலை குவித்து வருகிறது.

    பிகில் உடன் மோதும் கைதி

    பிகில் உடன் மோதும் கைதி

    இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று விஜய் நடித்த பிகில் படம் வெளியாகிறது. இவருடன் போட்டி போட விஜய் சேதுபதியும், கார்த்தியும் தயாராகிவிட்டார்கள். விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் படமும், கார்த்தி நடித்த கைதி படமும் தான் இந்த ஆண்டு விஜய்யின் பிகில் படத்துடன் நேருக்கு நேர் மோதப் போகின்றன.

    விஜய் - கார்த்தி

    விஜய் - கார்த்தி

    தளபதி விஜய் நடித்த படமும் கார்த்தி நடித்த படமும் இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டில் தான் வெளியாகின. அந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று விஜய் நடித்த காவலன் படமும் கார்த்தி நடித்த சிறுத்தை படமும் வெளியாகி இரண்டுமே சக்கை போடு போட்டன. அதன் பின்னர் இரண்டு பேரும் நடித்த படங்கள் நேருக்கு நேர் மோதியதில்லை.

    கார்த்தியின் கைதி

    கைதி படம் தீபாவளியன்று வெளியாவதை நடிகர் கார்த்தியும் அதிகார பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். கார்த்தியின் ரசிகர்களும் இதை வரவேற்றுள்ளனர். வரலாறு மீண்டும் திரும்புகிறது என்று கமெண்டுகளை தெறிக்க விடுகின்றனர். இதனால் இரு தரப்பு ரசிகர்களிடமும் இப்போதே பரபரப்பு தொற்றிக்கொண்டு விட்டது என்றே சொல்லலாம்.

    English summary
    After a gap of eight years, Vijay starrer Bigil film and Karthi starrer Kaithi film released on Diwali, has caused much anticipation for both parties.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X