இந்த முறை போட்டி கன்ஃபார்ம்.. 8 ஆண்டுகளுக்குப் பின்பு விஜய் – சூர்யா நேருக்கு நேர் மோதல்!

Recommended Video

Soorarai Pottru thalapathy 64 clash | 8 ஆண்டுகளுக்குப் பின்பு விஜய் – சூர்யா மோதல்!

சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது, சூரரைப் போற்று படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 64' படமும் கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதால், விஜய் - சூர்யா நேருக்கு நேர் மோதல் உறுதியாகியுள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

கைதி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் உருவாகியுள்ளது.

அதேபோல, இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி அந்த படத்தின் மீதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது.

மோதவில்லை

மோதவில்லை

கடந்த ஆண்டு தீபாவளிக்கு சூர்யாவின் என்.ஜி.கே மற்றும் விஜய்யின் சர்கார் படங்கள் நேருக்கு நேர் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செல்வராகவன் இயக்கத்தில் உருவான என்.ஜி.கே திரைப்படம் சில பல காரணங்களுக்காக தள்ளிப்போனதால், கடந்த ஆண்டு இருவரது படங்களும் மோதவில்லை.

8 ஆண்டுகள்

8 ஆண்டுகள்

கடந்த 2011ம் ஆண்டு விஜய்யின் வேலாயுதம் மற்றும் சூர்யாவின் 7ஆம் அறிவு படங்கள் நேருக்கு நேர் மோதின. மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான வேலாயுதம் படத்தை சூர்யாவின் 7ஆம் அறிவு படம் பாக்ஸ் ஆஃபிஸ் பீட் செய்தது. இந்நிலையில், சுமார் 8 ஆண்டுகள் கழித்து அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டத்தில் இரு பெரும் படங்கள் நேரடியாக மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லேடி சூப்பர்ஸ்டாரும்

லேடி சூப்பர்ஸ்டாரும்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்து அம்மன் படமும், கோடை கொண்டாட்டமாக ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த ரேஸில் நயன்தாராவும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படமும் கோடை கொண்டாட்டமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X