twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகாமுனியில் ரீ எண்ட்ரீ... சினிமாவில் ஜி.எம்.சுந்தரின் நீண்ட கால போராட்டம்

    |

    சென்னை: நடிகர் ஜி.எம்.சுந்தர் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மகாமுனி திரைப்படத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த இடத்தை தக்கவைக்க நீண்ட காலம் போராடியுள்ளார். நலன் குமாரசாமி இயக்கத்தில் காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அந்த வாய்ப்பே மகாமுனி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

    புன்னகை மன்னன் படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரால் எங்கள் பெருமை மிகு அறிமுகம் என்ற டைட்டிலோடு அறிமுகப்படுத்தப்பட்டவர் ஜி.எம்.சுந்தர். அந்த படம் மூலம் கமல்ஹாசனின் நட்பு கிடைத்ததால் அவரது நடிப்பில் வெளியான சத்யா திரைப்படத்தில் அவருக்கு எதிரான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் மூலம் பிரபலம் அடைந்த ஜி.எம்.சுந்தர் சத்யா சுந்தர் என்று அழைக்கப்படுகிறர்.

    After a long struggle, I was able to take my place-G.M.Sundar

    பூட்டுக்கு பேர் போன திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் சென்னைக்கு வந்து செட்டில் ஆன ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு வந்த ஜி.எம்.சுந்தர் சிறு வயதிலேயே அவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அடையாரில் உள்ள ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து படித்தார்.

    அவருடன் திரைப்பட கல்லூரியில் பயின்ற மற்ற பிரபலமான கலைஞர்கள் அர்ச்சனா, நாசர், பப்லு. கல்லூரி படிப்பை முடித்த பிறகு திரைப்பட வாய்ப்பிற்காக கவிதாலயா ஆபீஸ் சென்றவருக்கு எழுத்தாளர் அனந்து மூலம் கே.பாலசந்தரிடம் நடித்து காண்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவரின் அன்பை பெற்றவருக்கு புன்னகை மன்னன் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

    மெட்ரோ பணியின் போது 11வது மாடியில் இருந்து விழுந்த பெரிய பாறை.. நூலிழையில் உயிர் தப்பிய பிரபல நடிகை!மெட்ரோ பணியின் போது 11வது மாடியில் இருந்து விழுந்த பெரிய பாறை.. நூலிழையில் உயிர் தப்பிய பிரபல நடிகை!

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு, தொட்டி ஜெயா, அதர்மம், பொன்னுமணி, கிழக்குக்கரை, எங்க ஊரு காவல்காரன் போன்ற 70க்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி ஹீரோக்களுடன் பல்வேறு கதாபத்திரிங்களில் நடித்துள்ளார். இடைவெளி விட்டு விட்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் போராடி தான் அந்த வாய்ப்புகளை பெற்றார்.

    2003ஆம் ஆண்டு வெளியான உருமாற்றம் என்ற குறும்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். இயக்குனர் லெனின் இயக்கத்தில் ஊருக்கு நூரு பேர் என்ற திரைப்படம் தேசிய விருது பெற்றது. அந்த திரைப்படத்தின் ஹீரோ .ஜி.எம்.சுந்தர் தான்.

    நலன் குமாரசாமி இயக்கத்தில் காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். மேலும் தற்போது வெளியாகிய மகாமுனி திரைப்படத்தில் ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்துள்ளார் இயக்குநர் சாந்தகுமார்.

    யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் மண்டேலா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இது தவிர சைரன் மற்றும் மேலும் இரு படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். ஜி. எம்.சுந்தருக்கு 2019ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. 1982ஆம் ஆண்டு திரைப்பட கல்லூரி படிப்பை முடித்தாலும் தற்போது தான் எனக்கான இடத்தை நான் பெற்றுள்ளேன் என்று மிகவும் மகிழ்ச்சியாக கூறுகிறார் ஜி.எம்.சுந்தர். அவரின் நம்பிக்கை பயணம் மேலும் தொடர எங்களது வாழ்த்துக்கள்.

    English summary
    Actor G.M.Sundar made a comeback in Tamil cinema by playing a pivotal role in Nalan Kumarasamy's directorial venture Kadhalum Kadandhu Pogum. G.M.Kumar has also made a stellar performance in the film 'Magamuni' which is currently being released successfully.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X