சூர்யா 42 படத்துல நிறைய சர்ப்பிரைஸ் காத்திருக்கு..தேவிஸ்ரீ பிரசாத் சொன்னது இதுதான்!

சென்னை : நடிகர் சூர்யாவின் சூர்யா 42 படத்தின் பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

சென்னையில் சில நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் கோவாவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சில வாரங்கள் நடத்தப்பட்டன.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் இணைந்துள்ளார். சிங்கம் படங்களில் இந்தக் கூட்டணி சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது மீண்டும் சேர்ந்துள்ளது.

சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்

சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என அடுத்தடுத்த படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்தது. குறிப்பாக சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் சர்வதேச அங்கீகாரத்தை கொடுத்தது. விக்ரம் படத்தில் அவரது ரோலக்ஸ் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சூட்டிங் நிறுத்தப்பட்ட வணங்கான்

சூட்டிங் நிறுத்தப்பட்ட வணங்கான்

இதனிடையே இந்தப் படங்களை தொடர்ந்து பாலாவின் வணங்கான் படத்தில் இணைந்தார் சூர்யா. 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி இணைந்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக காணப்பட்டது. ஆனால் படம் 35 நாட்கள் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் நிறுத்தப்பட்டது.

சூர்யா42 படத்தில் சூர்யா

சூர்யா42 படத்தில் சூர்யா

இதனிடையே தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் பூஜை போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் கோவாவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சில வாரங்கள் சூட்டிங் நடத்தப்பட்டது.

கோவாவில் டூயட் சாங் சூட்டிங்

கோவாவில் டூயட் சாங் சூட்டிங்

இந்தப் படத்தில் சிங்கம் படங்களை தொடர்ந்து தற்போது தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் கோவாவில் நடைபெற்ற நிலையில், சூர்யா திஷா பட்டானி இணைந்து டூயட் பாடல் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தின் இசை அனைவரையும் கவர்ந்த நிலையில், கோவாவில் இருந்து சூர்யா உள்ளிட்டோர், தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வாழ்த்துக்களை பகிர்ந்ததாக முன்னதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

தேவிஸ்ரீ பிரசாத் பாராட்டு

தேவிஸ்ரீ பிரசாத் பாராட்டு

இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் வெளிநாடுகளில் படமாக்க உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கேரியா உள்ளிட்ட 5 நாடுகளில் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளது. இதனிடையே, இந்தப் படம் வித்தியாசமான படமாக உருவாகி வருவதாக தேவிஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.

 ராக்கிங் ஸ்கிரிப்ட்

ராக்கிங் ஸ்கிரிப்ட்

இந்தப் படத்திற்காக ராக்கிங் ஸ்கிரிப்டை சிவா எழுதியுள்ளதாகவும் படத்தில் ரசிகர்களுக்கு அதிகமான சர்ப்பிரைஸ்கள் இருக்கும் என்றும் கூறியுள்ள தேவிஸ்ரீ பிரசாத், படத்திற்காக சூர்யா பல லுக்குகளுடனும் கெட்டப்புகளுடனும் தோன்றவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி மோஷன் போஸ்டர்

அதிரடி மோஷன் போஸ்டர்

முன்னதாக படத்தின் சூட்டிங் துவங்கிய சிறிது நாட்களிலேயே மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் சில வரலாற்று கேரக்டர்களின் பெயர்கள் இடம்பெற்ற நிலையில், அந்த கெட்டப்புகளில் சூர்யாவே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X