அஜித் படத்துக்கு அப்புறமா எச் வினோத் யாரை இயக்குறாருன்னு பாருங்க... சூப்பரப்பு!
சென்னை : நடிகர் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள படம் வலிமை.
Recommended Video
இந்தப் படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். அஜித்தின் அடுத்த படத்தையும் அவரே இயக்கவுள்ளார்.
இந்நிலையில் அவர் அஜித் படத்திற்கு பிறகு யாரை இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை படம்
நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, புகழ் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது வலிமை படம். இந்தப் படம் தற்போது 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான வசூலை இந்தப் படம் ஈட்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

வசூல்மழையில் வலிமை
தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பின்னி பெடலெடுத்து வருகிறது வலிமை. வார இறுதி நாளான இன்றும் கலெக்ஷன் அள்ளும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. படத்தின் நீளம் அதிகமாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது படத்தின் 14 நிமிட காட்சிகள் கத்தரிப்பு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பான ஹுமா குரேஷி
படத்தில் ஹுமா குரேஷி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எச் வினோத் டைரக்ஷனில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். அந்த வகையில் அவரது கேரக்டர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது.

3வது முறையாக கூட்டணி
அஜித் மற்றும் போனிகபூர் கூட்டணியுடன் மூன்றாவது முறையாக இணையவுள்ளார் எச் வினோத். அஜித்தின் 61வது படமான இந்தப் படத்தின் பூஜை வரும் மார்ச் மாதத்தில் போடப்படவுள்ளதாகவும் விரைவில் சூட்டிங்கை முடித்து தீபாவளி ரிலீசாக படம் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் 61 படம்
படத்தில் அஜித்தின் லுக் குறித்து தயாரிப்பாளர் போனிகபூர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் வாலி, மங்காத்தா படங்களை தொடர்ந்து நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் பூஜை போடப்படவுள்ளது.

வினோத்தின் அடுத்த படம்
இந்தப் படத்தையடுத்து எச் வினோத் யாரை இயக்குவார் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே காணப்பட்டது. இந்நிலையில் அவர் அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுதிபதிக்கு எந்த மாதிரியான கதையை வினோத் தேர்ந்தெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











