என்னது அஜித்குமாரை தொடர்ந்து இந்த சூப்பர் ஹீரோவை எச் வினோத் இயக்குறாரா.. சூப்பர்தான்!
சென்னை : நடிகர் அஜித்தின் 3வது படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஹெச் வினோத்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து தற்போது ஏகே 61 படம் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்கள் போடப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்தின் ஏகே61 படம்
நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகி வருகிறது ஏகே61. இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கி வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித்குமார், ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

விறுவிறு சூட்டிங்
இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் இரட்டை வேடங்களில் அஜித் நடித்து வருவதாகவும், அவரே ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்திற்காக ஐதராபாத்தில் மவுண்ட் ரோட் மற்றும் பேங்க் செட்கள் பிரம்மாண்டமாக போடப்பட்டுள்ளன.

ரசிகர்களை கவர்ந்த அஜித் படங்கள்
பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட அஜித்தின் படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதிகமாக பகிரப்பட்டு வைரலாகவும் ஆகி வருகிறது.

ஹெச் வினோத்திற்கான சவால்
மற்ற படங்களை போல இல்லாமல் இந்தப் படத்தின் கதையையும் ஹெச் வினோத்தே எழுதியுள்ளதாக தெரிகிறது. அதனால் படத்தில் விறுவிறுப்பான திரைக்கதையை எதிர்பார்க்கலாம். கடந்த வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்தப் படத்தை ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப கொடுக்க வேண்டிய கட்டாயம் ஹெச் வினோத்திற்கு ஏற்பட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அவரது தீரன் அதிகாரம் ஒன்று படம் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட படம். அந்த வகையில், தற்போது ஏகே 61 படத்தையும் அவர் கொடுப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். படம் விரைவில் சூட்டிங் முடிக்கப்பட்டு தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளது.

ஹெச் வினோத்தின் அடுத்தப்படம்
இந்நிலையில் ஏகே 61 படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்ததாக ஹெச் வினோத் யாரை இயக்குவார் என்ற தகவல்களும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அடுத்ததாக விஜய் சேதுபதியை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியை இயக்கும் வினோத்?
இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வரும் சூழலில், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி, அடுத்தடுத்த சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கோலிவுட்டில் வெற்றிப் பெறும் படங்களில் அவரது பங்களிப்பு கண்டிப்பாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஹெச் வினோத் -விஜய் சேதுபதி கூட்டணியும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications