மாரி செல்வராஜின் படத்தை பார்த்து ஜனநாயகன் இயக்குநர் கொடுத்த ரியாக்‌ஷன்.. ஆள் அசந்துபோய்ட்டாராம்

சென்னை: ஹெச்.வினோத் சதுரங்க வேட்டை திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அடுத்த படமான தீரன் அதிகாரம் ஒன்றிலும் பெரிய கவனத்தை ஈர்த்ததால் அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏகேவை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கிய அவர்; இப்போது விஜய்யை வைத்து ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சென்சார் பிரச்னையால் ரிலீஸாகாமல் முடங்கியிருக்கிறது.

நட்டியை வைத்து சதுரங்க வேட்டை படத்தை முதன்முறையாக இயக்கினார் ஹெச்.வினோத். பெரிய ஸ்டார் இல்லை, இயக்குநருக்கு பெரிய பிரபல்யம் இல்லை; சொல்லப்போனால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பே இல்லை. அந்தப் படத்தோடு வெளியான வேலையில்லா பட்டதாரி படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் சதுரங்க வேட்டைக்கு போனவர்கள்தான் அதிகம். அப்படி எதேச்சையாக போனவர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸை கொடுத்திருந்தார் வினோத். படத்தின் ஒவ்வொரு சீனும் புது அனுபவத்தை கொடுக்க படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

இரண்டாவது படமும் ஹிட்: முதல் படத்தின் ஹிட்டுக்கு பிறகு கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கினார். முதல் படத்தில் ஒரு கிரிமினலை பற்றி படம் எடுத்த அவர்; இரண்டாவது படத்தில் காவல் துறை அதிகாரியை மையமாக வைத்து இயக்கியிருந்தார். தமிழ்நாட்டை அச்சுறுத்திய பவாரியா என்ற கொள்ளை கும்பலை பிடிப்பதுதான் மையக்கரு. அதுவரை தமிழ் சினிமா பார்க்காத போலீஸ் படத்தை ப்ரெசண்ட் செய்து அசத்தினார்.

After Ajith Setbacks H Vinoth s Emotional Reaction to Pariyerum Perumal Goes Viral
Photo Credit:

அஜித்துடன் மூன்று படங்கள்: தொடர்ச்சியாக இரண்டு படங்களை மெகா ஹிட்டாக கொடுத்த அவருக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்கள் வரிசையாக பணியாற்றினார். ஒன்றுகூட சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முதலிரண்டு படங்களில் சம்பவம் செய்திருந்த வினோத் அஜித்துடனான மூன்று படங்களிலும் சத்தமே இல்லாமல் போய்விட்டார். அதற்கு காரணம் அஜித்தின் தலையீடுதான் என்று ஒருதரப்பினரும்; பெரிய ஹீரோவுக்காக இப்படி காம்ப்ரமைஸ் ஆகிவிட்டாரே என்று ஒருதரப்பினரும் சொன்னார்கள்.

விஜய்யுடன் ஜனநாயகன்: அஜித்தை வைத்து இயக்கிய மூன்று படங்களுமே பெரிய ஏமாற்றத்தைத்தான் கொடுத்தன. இப்படிப்பட்ட சூழலில்தான் விஜய்யை வைத்து ஜனநாயகன் படத்தை இயக்கினார். அந்தப் படமும் சென்சார் பிரச்னையால் ரிலீஸாகாமல் முடங்கியிருக்கிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு அவர் கூறிய விஷயத்தை இயக்குநர் ராஜுமுருகன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ராஜுமுருகன் சொன்னது: மை லார்ட் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், "பரியேறும் பெருமாள் திரைப்படத்தை ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் நானும் வினோத்தும்தான் பார்த்தோம். படத்தை பார்த்து வெளியே வந்த பிறகு வினோத் என்னிடம், 'சார் என்ன சார் இவன். இப்படி ஒரு படத்தை எடுத்து வெச்சிருக்கான். இப்போ வர பசங்க கலக்குறாங்கள்' என்று கை, கால்கள் எல்லாம் ஆடியபடி சொன்னார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X