அஜித்தை தொடர்ந்து வீர தீர சூரனுடன் இணையும் மகிழ் திருமேனி.. சூப்பர் காம்போவா இருக்கே!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார் மகிழ் திருமேனி. முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான தடம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில் தற்போது அஜித்தை லைகா தயாரிப்பில் இயக்கி வருகிறார் மகிழ்திருமேனி.

இந்த படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் படத்தின் பேட்ச் வேலைகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி எந்த நடிகருடன் இணைவார் என்பது குறித்து தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி அவர் அடுத்ததாக வீர தீர சூரன் பட ஹீரோவுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

magizh thirumeni vikram

விடாமுயற்சி படம்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார் மகிழ் திருமேனி. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டிலேயே துவங்கப்பட்ட நிலையில் ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையிலும் இன்னும் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவடையாமல் உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தது. படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கப்பட்ட நிலையில் அங்கு நிலவிய கால சூழல் காரணமாக தொடர்ந்து ஆறு மாதங்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நடக்காமல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டு ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்ததாக கூறப்பட்டது.

விடாமுயற்சி படம்: இந்நிலையில் மீண்டும் இந்த படத்தின் சூட்டிங் தற்போது துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்திற்கு தள்ளிப் போக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு திட்டமிடப்பட்டு வந்தது. தாமதமானாலும் படத்தின் கதைக்களத்தில் எந்தவிதமான காம்ப்ரமைசும் செய்து கொள்ளக்கூடாது என்பதில் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் அஜித் கேரியரில் மிகச்சிறப்பாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

மகிழ் திருமேனியின் அடுத்தப்படம்: விடாமுயற்சி படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனியின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி பல ஆண்டுகளாக மாஸ் நடிகராக தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விக்ரம் தான் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்த படத்தை தொடர்ந்தே அவர் அடுத்ததாக மகிழ் திருமேனியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிழ் திருமேனி -விக்ரம் காம்போ: இந்த படத்தின் தயாரிப்பு தரப்பு குறித்தும் படத்தின் சூட்டிங் குறித்தும் விரைவில் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். விக்ரம் எப்போதுமே தேர்ந்தெடுத்த கதைகளில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையிலான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அந்த வகையில் தடம் உள்ளிட்ட முன்னணி படங்களை கொடுத்த மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அவர் இணையவுள்ளது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X