அம்புலியைத் தொடர்ந்து ஆ-வில் நாயகன் வாய்ப்பு பெற்ற கோகுல்
கலக்க போவது யாரு, மானாட மயிலாட ஆகிய நிகழ்சிகளின் மூலம் பிரபலமான கோகுல், இப்போது பெரிய திரையில் நல்ல வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.
யுனி சைக்ளிங் (uni cycling) மற்றும் ஜக்ளிங் (juggling) ஆகிய திறன்களில் சோபிக்கக் கூடியவர். மேடை அனுபவங்கள் அவரது திறமைக்கு ஒரு சான்று.
பல்வேறு நாடுகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்த சென்று வந்த கோகுல் அந்த நாட்டு மேடை கலைஞர்களின் திறமைகளை கண்டு தன நடிப்பை மெருகேற்றி கொண்டு இருக்கிறாராம்.

அம்புலியில்
தன்னுடைய முதல் படமான அம்புலி 3 டி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே பட குழுவினர் தயாரித்து இயக்கம் ' ஆ' படத்திலும் நடிக்கிறார்.

நன்றி
இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷுக்கு என் மனமார்ந்த நன்றி. என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தமைக்கு தயாரிப்பாளர்கள் வீ லோகநாதன், வீ ஜெகநாதன் மற்றும் ஸ்ரீனிவாஸ் லோகநாதன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி," என்றவர் தனது அடுத்த படம் குறித்து கூறுகையில்,

ஜம்போ 3 டி
"இந்தப் படத்தை தொடர்ந்து எம் எஸ் ஜி மூவீஸ் நிறுவனத்தாருடன் ஷங்கர் பிரதர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் 'ஜம்போ 3 டி ' என்ற படத்தில் நடிக்க உள்ளேன்.

ஜப்பானில்
இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் ஜப்பானில் நடக்க உள்ளது. இந்த படம் குழந்தைகளுக்கு நிச்சயமாக பிடிக்கும். என் பலமே என் தன்னம்பிக்கைதான். என் வெற்றிக்கு நான் இந்த அளவுக்கு வளர காரணமான கலா மாஸ்டருக்கு என் உளமார்ந்த நன்றி. சின்ன திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்துள்ள மற்ற நட்சத்திரங்கள் போலவே நானும் மின்னுவேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











