ஏ.ஆர். முருகதாஸ் ஏமாத்துனது பத்தாதுன்னு வாரிசு இயக்குநரிடமும் ஏமாற போறாரா சல்மான் கான்?.. பாவம்!

சென்னை: பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் போன்ற இளம் நடிகர்கள் 1000 கோடி பாக்ஸ் ஆபீஸை அசால்ட்டாக அடித்து நொறுக்கி வரும் நிலையில், அமீர் கான், சல்மான் கான் போன்ற கான் நடிகர்களின் நிலைமை படுமோசமாகிக் கொண்டே போகிறது என பாலிவுட் ரசிகர்களே ஃபீல் செய்து வருகின்றனர்.

சல்மான் கான் தொடர்ந்து தென்னிந்திய இயக்குநர்களையும் படங்களையும் ரொம்பவே மதிக்கத் தொடங்கியுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த சிக்கந்தர் திரைப்படம் மிகப்பெரிய தோல்விப் படமாக மாறியது.

After AR Murugadoss Now Salman Khan choses Vamshi Paidipally for his next

இந்நிலையில், அடுத்ததாக அவர் வாரிசு பட இயக்குநரான வம்சிக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளது தான் சல்மான் கான் ரசிகர்களையே பயங்கர டென்ஷன் ஆக்கியுள்ளது எனக்கூறுகின்றனர்.

மாஸ் ஃபேன் பேஸ்: ஷாருக்கான், அமீர்கானை விட சல்மான் கானுக்குத்தான் பாலிவுட்டில் ஃபேன் பேஸ் அதிகம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தனது ரசிகர் வட்டத்தை அதிகளவில் சல்மான் கான் இழந்து வரக் காரணமே இயக்குநர்களையும் படங்களையும் அவர் தேர்வு செய்யும் விதம் தான் எனக் கூறுகின்றனர். படம் வெளியாவதற்கு முன்னதாக சல்மான் கானை இயக்குநர்கள் புகழ்வதும், வெளியான பின்னர், அவரை வைத்து ஷூட்டிங்கே பண்ண முடியாது என புலம்புவதும் தொடர்கதையாக மாறியுள்ளது.

After AR Murugadoss Now Salman Khan choses Vamshi Paidipally for his next

வாரிசு இயக்குநர் இயக்கத்தில்: மகேஷ் பாபுவுக்கு மகரிஷி படத்தைக் கொடுத்து வெற்றிக் கண்ட தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தான் அடுத்து சல்மான் கான் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். மகரிஷி படம் போல நம்ம படமும் இருக்கும் என விஜய் நம்பி வாரிசு படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் மெகா சீரியல் போல இருக்கு என அனைவருமே ட்ரோல் செய்யத் தொடங்கினர். படம் பெரிய நஷ்டம் என தயாரிப்பாளர் தில் ராஜுவே புலம்ப ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கப் போகும் படம் வரும் ஏப்ரல் மாதம் முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கப் போவதாக சல்மான் கான் அறிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் படம் போல ஆகிடக் கூடாது: ஏ.ஆர். முருகதாஸ் கம்பேக் கொடுக்கப் போகிறார் என காத்திருந்த ரசிகர்களுக்கு சிக்கந்தர், மதராஸி என அடுத்தடுத்து 2 அருமையான படங்களை கொடுத்து ரசிகர்களை அழ வைத்து விட்டார். வாரிசு படத்தில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்து சல்மான் கானுக்கு வம்சி இந்த முறையாவது நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X