அர்ஜுன் கபூரைத் தொடர்ந்து அவரது காதலிக்கும் கொரோனா பாதிப்பு.. தனிமை சிகிச்சையில் பிரபல நடிகை!
மும்பை: அந்த ஹீரோவை அடுத்து, அவர் பிரபல நடிகைக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் கடும் பீதியில் உள்ளன. இந்த உயிர்கொல்லி வைரஸ் மக்களை கடுமையாக மிரட்டி வருகிறது.
இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துவருகிறது.

நிக்கி கல்ராணி
இந்த கொரோனா காரணமாக, பிரபல நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இதன் பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டனர். நடிகர் விஷால், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகை நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகையும் எம்.பியுமான சுமலதா, ஷர்மிளா மந்த்ரே உள்பட பலருக்கும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது.

அர்ஜூன் கபூர்
இந்நிலையில் பிரபல நடிகர் அர்ஜூன் கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன். போனிகபூர், தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தைத் தயாரித்தார். இப்போது வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.
இந்தி சினிமாவில் இணை இயக்குனராக அறிமுகமான அர்ஜுன் கபூர், ஹீரோவாக நடித்து வருகிறார்.

தனிமை சிகிச்சை
இவர், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று நேற்று கூறியிருந்தார். இதற்காக வீட்டில் தனிமைப் படுத்தப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்து இருந்தார். இது அசாதாரணமான, இதற்கு முன் கண்டிராத கடினமானச் சூழல். இந்தக் கொடிய வைரஸில் இருந்து மனித குலம் விரைவில் விடுபடும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

மலைகா அரோரா
இந்தி நடிகை மலைகா அரோராவும் அர்ஜுன் கபூரும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர். அர்ஜுன் கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நடிகை மலைகா அரோராவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு அவரும் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மணிரத்னத்தின் உயிரே படத்தில் தைய தைய்ய தைய்ய தைய்யா தையா பாடலுக்கு ஆடியவர்.

படப்பிடிப்பு தள்ளி வைப்பு
அர்ஜுன் கபூர், நடிகை ரகுல் பிரீத் சிங்குடன் இணைந்து பெயரிடப்படாத இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் வரும் 10 ஆம் தேதி மும்பையில் நடப்பதாக இருந்தது. இப்போது அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகை மலைகா அரோரா சோனி டிவிக்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார். அதன் படப்பிடிப்பும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











