ஏலே கேட்டுக்கோ... மீண்டும் நெல்லை வழக்கு பேசுகிறார் தனுஷ்! ரெடியாகுது அட்டகாச செட்!

By

Recommended Video

Chill Bro Lyrical Video | Dhanush | Sathya Jothi Films | Pattas

சென்னை: அசுரன் படத்துக்குப் பிறகு மீண்டும் நெல்லை வழக்கில் பேசி, தனுஷ் நடிக்க இருக்கிறார்.

வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்த படம், 'அசுரன்'. திருநெல்வேலியில் நடக்கும் கதையாக இது உருவாக்கப்பட்டிருந்தது. இதில் நெல்லை வழக்குப் பேசி நடித்திருந்தார் தனுஷ். இந்தப் படத்தை அடுத்து அவர் நடித்துள்ள பாட்டாஸ், சுருளி ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் பட்டாஸ் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் தனுஷ். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

After asuran, Dhanush is going to speak nellai slang again.

இதற்கிடையே, பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்துக்கு கர்ணன் என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயண் இசை அமைக்கிறார். மலையாள நடிகை ரஜிஷா விஜயன் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படத்திலும் தனுஷ் நெல்லை வழக்கில் பேசி நடிக்க இருக்கிறார். ஷூட்டிங் திருநெல்வேலியில் நடக்க இருக்கிறது. இதற்காக கருங்குளம் அருகே பிரமாண்டமான கிராமம் செட் அமைக்கப்படுகிறது. இந்த மாதம் 10 ஆம் தேதி படப்பிடிப்புத் தொடங்குவதாக இருந்தது. திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துவருவதால், வரும் 20 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Read more about: dhanush தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X