அப்ப, நல்ல பாம்பு குட்டி..இப்ப யானை..பிரபல நடிகையின் வித்தியாச பாசம்..வீடியோ வெளியிட்டு அசத்தல்!

By

திருவனந்தபுரம்: நல்லபாம்பு குட்டியை கையில் ஏந்திய பிரபல நடிகை இப்போது யானையை கட்டிப்பிடித்தபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழில், சசிகுமார் நடித்த வெற்றிவேல், கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமின் சாமி 2, கோமாளி உட்பட சில படங்களில் நடித்தவர், மலையாள நடிகை பிரவீணா.

மலையாளத்தில் இங்கிலீஸ் மீடியம், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கவுரி, அக்னி சாட்சி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நல்ல பாம்பு

நல்ல பாம்பு

தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இது தவிர மலையாளத்தில், சில நடிகைகளுக்கு டப்பிங்கும் கொடுத்து வருகிறார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள கரமனையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டு கோழிக்கூட்டில் நல்ல பாம்பு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் புகுந்தது.

நல்லபாம்பு குட்டி

நல்லபாம்பு குட்டி

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பாம்பு பண்ணைக்குத் தகவல் தெரிவித்தார். அங்குள்ள ஊழியர்கள் விரைந்து வந்து கோழிக் கூட்டிலும் அதன் சுற்றுப்புறங்களில் தேடினர். அப்போது முட்டையில் இருந்து வெளிவந்து சில நாட்களான நல்லபாம்பு குட்டி ஒன்று அங்கு பதுங்கி இருந்தது. அதைப் பாம்பு பண்ணை ஊழியர்கள் பிடித்தனர். குட்டியாக இருந்தாலும் அது படமெடுத்து ஆடியபடி இருந்தது.

இரண்டு கைகளிலும்

இரண்டு கைகளிலும்

இதனால் பிரவீணா உட்பட அவர் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், ஊழியர்கள், பாம்பை கண்டு பயப்பட வேண்டாம் என்று நம்பிக்கைக் கொடுத்தனர். பின்னர் அந்த குட்டிப் பாம்பை, பிரவீணா கையில் கொடுத்தனர். அதை இரண்டு கைகளிலும் பெற்றுக்கொண்ட பிரவீணா, வைத்துக்கொண்டார். இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார், பிரவீணா. இது வைரலானது.

கட்டிப்பிடித்தபடி

கட்டிப்பிடித்தபடி

இந்நிலையில் நடிகை பிரவீணா, இப்போது யானையின் தும்பிக்கையை கட்டிப்பிடித்தபடி வீடியோ எடுத்துள்ளார். யானைக்கு வாழைப்பழங்களை கொடுக்கும் அவர், அதன் முன் தும்பிக்கையை தடவி கொடுத்தபடி ஏதோ சொல்கிறார். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X