கேபியிடம் எகிறிய ஷிவானி.. இப்போ தலைகுனிஞ்சு என்னம்மா பண்றது.. முதல்ல பாலாவை ஏத்திவிட்டதே நீ தான?
சென்னை: பாலாவை வறுத்து முடித்த கையோடு, ஷிவானியையும் பிடித்து அந்த எண்ணெய் சட்டிக்குள் கமல் போடும் இரண்டாவது புரமோ வேற லெவல்.
ஹானஸ்ட்டுக்கும் ஹானஸ்ட்டிக்கும் என்ன வித்தியாசம் என கேபியிடம் கமல் கேட்கத் தொடங்க, அடுத்த பஞ்சாயத்து ஸ்டார்ட்.
எனக்குத் தெரியுமே, என கமல் உட்கார்ந்து கொண்டே பஞ்ச தந்திரம் ஸ்டெப் போடுவது பக்கா!

நல்லா வசதியா
நடிகர் கமலுக்கு மீண்டும் நல்லா வசதியா உட்கார்ந்து கொண்டு வறுத்தெடுக்க சூப்பரான நாற்காலி ஒன்றை விஜய் டிவி கொடுத்து இருக்கிறது. பல மணி நேரங்கள் நடத்தப்படும் நிகழ்ச்சியில், மற்ற போட்டியாளர்கள் எல்லாம் சோபாவில் உட்கார்ந்து இருக்க கமல் மட்டும் நிற்பதில் என்ன நியாயம்.

ஷிவானிக்கு எண்ணெய் சட்டி
முதல் புரமோவில் பாலாவை எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்தெடுத்த கமல், இரண்டாவது புரமோவில் கேபியுடன் எகிறி சண்டை போட்ட ஷிவானியை எண்ணெய் சட்டியில் போட்டு பொறித்து எடுக்க ஆரம்பித்துள்ளார். வழக்கமா சன் டே எபிசோடு எலிமினேஷனுடன் களை கட்டும், இந்த வாரம் தான் எலிமினேஷன் இல்லை என சோர்ந்து போன ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக கமல் பண்ணும் பஞ்சாயத்து அமைந்துள்ளது.

கேபி பிரச்சனை
ஹானஸ்ட்டுக்கும் ஹானஸ்ட்டிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க கேபி என பாலாவின் இரண்டாவது பிரச்சனையில் கமல் கை வைக்க, பாலா திருடுனதை நான் பார்த்துட்டேன். ஹானஸ்ட்டா சொல்லு பாலான்னு சொன்னேன் அவனும் சொல்லிட்டான். அப்புறம் வெளியே போயிட்டு மறுபடியும் உள்ளே வந்து சண்டை போட்டான் என கேபி புட்டு புட்டு வைத்தார்.

பஞ்சதந்திரம் கமல்
வெளியே என்ன நடந்தது தெரியுமா? என கமல் கேட்க, தனக்கு தெரியாது என கேபி ஓப்பனாக சொல்ல, எனக்குத் தெரியுமே என கமல் போடும் பஞ்ச தந்திரம் ஸ்டெப்புக்கு, எடிட்டர் நல்லாவே மியூசிக் சேர்த்துள்ளார். ஒட்டுமொத்த போட்டியாளர்களும், கமலை ரசிக்க, ஒரு அம்மாவின் தலை மட்டும் தொங்கிப் போச்சு.

ஷிவானி தலை தொங்கிடுச்சு
ஆர்வ மிகுதியில் சொல்லுங்க சார் என கேபி கேட்க, ஷிவானி தான் அந்த பிரச்சனையை வெளியே ஆரம்பித்தார். அதற்கு ஒத்து ஊதியது சுசித்ரா என கமல் நேரடியாக சொல்லாமல், கத்தியை அவங்க பக்கமே திருப்பி, அதை சம்பந்தப்பட்டவர்கள் சொன்னா நல்லா இருக்கும் என சொன்னவுடம் ஷிவானி டோட்டலாக ஆஃப் ஆகிய புரமோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











