Just In
- 7 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 8 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 9 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 10 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நான் பண்ணது தான் தப்பு.. அடிச்சி புடிச்சி விளையாடலாம்.. மோதிக் கொண்ட ஆரியும் சோமும்.. தெறிக்குது!
சென்னை: பந்து பிடிக்கும் போட்டியில் ஆரிக்கும் சோமசேகருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர சண்டையாக வெடித்தது.
ஆரம்பத்தில் இருந்தே பாலாவுக்கும் சோமுக்கும் முட்டிக் கொண்டிருந்த நிலையில், பாலா விலகிய நிலையில், சோமுக்கும் ஆரிக்கும் பந்தை பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
இருவரும் மாற்றி மாற்றி தங்கள் வாதங்களை முன் வைத்து நிகழ்ச்சியில் அனலை கிளப்பினர்.
என்ன கேம் இப்போ புரிஞ்சுதா.. வாரா வாரம் வரும் பிரச்சனை.. களத்தில் குறித்த பிக்பாஸ்!

சூடாகும் சோம்
கோழி, நரி டாஸ்க்கிலே அர்ச்சனாவின் முட்டை உடைந்த நிலையில், அத்தனை பாசமாக இருந்த இருவரும் அப்படி சண்டை போட்டுக் கொண்டனர். அர்ச்சனா வெளியேறிய போது அழுது துடித்த சோம், அர்ச்சனாவின் போட்டோ போட்ட முட்டையை அப்படி தூக்கி வீசி தனது கோபத்தை வெளிக்காட்டினார்.

சண்டையை உருவாக்கும் கேம்
பாலாவுக்கும் சோமசேகருக்கும் இடையே பந்து பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. பாலாவின் கை பெரிதாக இருப்பதால் எல்லையை தாண்டுகிறார் என்று சோமசேகரும், சோம் தனது காலை முன் நகர்த்தி ஏமாற்றி விளையாடுகிறார் என பாலாவும் ஆரம்பத்தில் சண்டை போட்டுக் கொண்டனர். அதன் பின்னர், ஆரியை சோமுடன் விளையாட பாலா முன்னிறுத்தினார்.

அடிச்சி புடிச்சி
ஆரியும் சோமசேகரும் விளையாடும் போதும் அதே பிரச்சனையை மீண்டும் சோமசேகர் கிளப்பினார். அடிச்சி புடிச்சி விளையாடலாம் என ஆரி பயன்படுத்திய வார்த்தையை பிடித்துக் கொண்டு அடிச்சி புடிச்சி விளையாடலாம்னுலாம் சொல்லக் கூடாது என புது பஞ்சாயத்தை கிளப்பினார் சோம்.

உன்னை கேட்டுருக்கக் கூடாதுடா
நான் பந்தை தொட்டேனா என்று சோமிடம் பதிலுக்கு ஆரி கேட்க, நான் பண்ணது தப்புடா.. உன்னை கேட்டுருக்கக் கூடாதுடா? என தனது வாதத்தை தொடர்ந்து வலியுறுத்திய சோமசேகர். மறுபடி மறுபடி அதே வார்த்தையை பயன்படுத்தி ஆரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நண்பர்களாக இருந்த இருவரும் திடீரென சண்டை போட்டுக் கொண்டதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

சோம் ஏன்
சோம், ரியோ, கேபி மற்றும் ரம்யா பாண்டியன் இருக்கும் அணி தான் அதிகளவிலான பந்துகளை பிடித்து மதிப்பெண்களை அள்ளி வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து சோமசேகர் ஏன் பாலா மீதும் ஆரி மீதும் கோபப்படுகிறார் என்கிற கேள்வியும், தனது குரல் உரக்க ஒலிக்க வேண்டும் என நினைக்கிறாரா? என்கிற ஐயமும் எழுகிறது.