அவங்க அப்பாவோட ஒண்ணா ஸ்கூல் படிக்கிற.. அவர் பொண்ணுக்கே ரோஸ் கொடுக்கிற.. கதையா இருக்கே!

சென்னை: பாலகிருஷ்ணாவை தொடர்ந்து சிரஞ்சீவிக்கும் ஜோடியாகி விட்டார் நடிகை ஸ்ருதிஹாசன்.

மகளிர் தினத்தன்று இந்த அற்புதமான விஷயத்தை ஷேர் செய்வதில் பெருமைக் கொள்கிறோம் என சிரஞ்சீவி ட்வீட் போட, ரசிகர்கள் அதற்கு கீழே பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

கமல்ஹாசனுக்கு இணையான வயது கொண்ட டோலிவுட் நடிகர்களுக்கு ஸ்ருதிஹாசன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து வருவதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்துள்ளனர்.

வயதான நடிகர்களுக்கு

வயதான நடிகர்களுக்கு

வயதான முன்னணி நடிகர்களுக்கு இளம் வயது கொண்ட நடிகைகள் ஜோடியாக நடித்து வருவது நீண்ட காலமாகவே சினிமாவில் நடந்து வருவது தான். ரஜினிக்கு மகளாக நடித்த மீனா அவருக்கே ஜோடியாகவும் நடித்திருந்தது அனைவருக்கும் தெரியும். அந்த லிஸ்ட்டில் வயதான நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் மாறி வருகிறார் என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

பாலையாவுக்கு ஜோடி

பாலையாவுக்கு ஜோடி

விஜய், அஜித், தனுஷ், விஜய்சேதுபதி என ஜோடி சேர்ந்து நடித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன் டோலிவுட்டில் அகண்டா படத்தின் மூலம் தியேட்டர்களை தெறிக்க விட்ட நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 107வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமீபத்தில் சம்மதம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இன்னொரு மூத்த நடிகருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

மெகா ஸ்டாருக்கு ஜோடி

மெகா ஸ்டாருக்கு ஜோடி

பாலகிருஷ்ணாவை தொடர்ந்து தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன். மகளிர் தினமான இன்று இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பதில் ரொம்ப சந்தோஷம் என மெகா ஸ்டாரின் 154வது படத்தில் ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளார் என ரோஜாப்பூக்கள் நிறைந்த பொக்கேவை சிரஞ்சீவி கொடுத்துள்ளார்.

அப்படியே காப்பி

அப்படியே காப்பி

பாலகிருஷ்ணா ஒருத்தரை ஜோடியாக்கி விட்டால் போதுமே, அப்படியே அதே ஹீரோயினை தனக்கும் ஜோடியாக்கி விடுவதையே வேலையாக வைத்திருக்கிறார் சிரஞ்சீவி என பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் இந்த அறிவிப்பை அறிந்ததுமே சிரஞ்சீவியின் ட்வீட்டுக்கு கீழே ட்ரோல் செய்து வருகின்றனர்.

சந்தானம் காமெடி

சந்தானம் காமெடி

இந்த ஹாட் அப்டேட்டை கேட்ட கோலிவுட் ரசிகர் ஒருவர் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் வரும் வசனத்தை போட்டு பங்கமாக கலாய்த்துள்ளார். "அவங்க அப்பாவோட (கமல்) ஒண்ணா ஸ்கூல் படிக்கிற.. அவர் பொண்ணுக்கே ரோஸ் கொடுக்கிற.. கதையா இருக்கே" என கலாய்த்துள்ளார்.

டோலிவுட்டில் பிசி

டோலிவுட்டில் பிசி

கோலிவுட்டில் ஸ்ருதிஹாசன் விஜய்சேதுபதி உடன் இணைந்து நடித்த லாபம் திரைப்படம் எதிர்பார்த்த லாபத்தை தரவில்லை. ஆனால், டோலிவுட்டில் தொடர்ந்து படங்களில் புக் ஆகி பெரிய அளவு லாபத்தை ஈட்டி வருகிறார் ஸ்ருதிஹாசன். பிரபாஸின் சலார் படத்திலும் ஸ்ருதிஹாசன் தான் ஜோடி என்பது இப்படி அவரை ட்ரோல் செய்பவர்களுக்கான பதிலடியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X