பாரதி கண்ணம்மாவை தொடர்ந்து முடிவுக்கு வரும் விஜய் டிவியின் அடுத்த சீரியல்?
சென்னை : விஜய் டிவியில் நீண்ட காலங்களாக ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா தொடர் விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதிகமான ரசிகர்களை கவர்ந்த இந்த தொடர், ஒரு கட்டத்தில் ரசிகர்களின் சலிப்பிற்கு உள்ளானது. சீரியல் எப்போது நிறைவடையும் என்று ரசிகர்களே கேட்கும் வகையில் அமைந்தது.
இந்நிலையில், இந்தத் தொடரை தொடர்ந்து விஜய் டிவியின் மற்றொரு நிகழ்ச்சியும் நிறைவு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவி சீரியல்கள்
விஜய் டிவியின் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளன. பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜாவே 2 என அடுத்தடுத்த சீரியல்கள் இந்த வரிசையில் உள்ளன.

பாரதி கண்ணம்மா தொடர்
முக்கியமாக பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா போன்ற தொடர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதில் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து பேமிலி சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு, கணவன் -மனைவிக்கு இடையிலான உறவையும் அவர்களுக்கிடையில் ஏற்படும் சந்தேகத்தையும் பிரதானமாக கொண்டு வெளியானது பாரதி கண்ணம்மா தொடர்.

ரசிகர்கள் கேள்வி
இந்தத் தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்களை கொடுத்து ரசிகர்களை கட்டிப் போட்ட இயக்குநர், ஒரு கட்டத்தில் அரைத்த மாவையே அரைத்ததால் ரசிகர்கள் கடுப்பானார்கள். இதையடுத்து சீரியல் எப்போது நிறைவடையும் என்று கேள்விகள் அதிகமானது. இதையடுத்து மருத்துவமனையில் தீவிரவாதிகள் என கதையில் சிலவற்றை சேர்த்தார் இயக்குநர்.

பொறுமையை சோதித்த சீரியல்
தொடர்ந்து பாரதிக்கு கண்ணம்மா குறித்த உண்மை தெரியவந்த நிலையில், அப்போதாவது இருவரும் இணைவார்கள், கதை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கண்ணம்மா, குழந்தைகள் மற்றும் தனது அப்பாவுடன் தங்களது சொந்த கிராமத்திற்கு செல்வதாக கதை நீண்டது. இதனால் ரசிகர்கள் பொறுமை இழந்தனர்.

விரைவில் நிறைவடையும் தொடர்
இந்நிலையில் தற்போது, சீரியல் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ப்ரமோவும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலுடன் விஜய் டிவியின் மற்றொரு சீரியலான ஈரமான ரோஜாவே 2 சீரியலும் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரமான ரோஜாவே தொடர் நிறைவு?
சமீபத்தில்தான் இந்த தொடர் துவங்கப்பட்டது. மேலும் இந்த சீரியலில் தற்போதுதான் சுவாரஸ்யங்கள் நிறைந்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் இந்த சீரியல் நிறைவடையவுள்ளதாக கூறப்படும் தகவல்கள் வதந்தி என்று ரசிகர்களை தங்களை சமாதானப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











