ஒரே ஒரு பிரஸ்மீட்.. சரசரவென ஜூலிக்கு அதிகரித்த ஓட்டுக்கள்.. இப்போ கடைசி இடத்தில் யார் தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 5ஐ விட பல மடங்கு பெட்டர் பிக் பாஸ் நிகழ்ச்சியாக அல்டிமேட் மாறி உள்ளது.

Recommended Video

Bigg Boss Ultimate Day 2:Julie பற்றி யாருக்கும் தெரியாத முகம் | மாறிய கண்ணோட்டம்

வனிதா விஜயகுமார் மற்றவர்களை ஓடவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் வனிதாவையே ஓட விடுகின்றனர்.

பிக் பாஸ் பிரஸ்மீட் டாஸ்க்கில் ஜூலி பேசியது பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், ஓட்டிங்கில் கடைசி இடத்தில் இருந்து பல படி முன்னேறி உள்ளார் என்பது தான் இதில் ஹைலைட்.

ஓவியா மாதிரி நடிக்கிறீங்களா

ஓவியா மாதிரி நடிக்கிறீங்களா

பிக் பாஸ் சீசன் 1ல் பார்த்த ஜூலிக்கும் இப்போ பார்க்கிற ஜூலிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.. நீங்க ஓவியா மாதிரி நடிக்கிறீங்களா அவங்களை காப்பி அடிக்கிறீங்களா என பிக் பாஸ் பிரஸ் மீட் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் ஜூலிக்கு எதிராக ஏகப்பட்ட கேள்விகள் தொடுக்கப்பட்டன. ஆனால், தான் ஓவியா மாதிரி நடிக்கவில்லை என்றும் ஓவியா ஓவியா தான். கடந்த சில ஆண்டுகளாக தனக்கு கிடைத்த அனுபவங்களால் தனது மெச்சூரிட்டி லெவல் சற்றே அதிகரித்து உள்ளது என விளக்கம் கொடுத்தார் ஜூலி.

மாணவர்களுக்கு உதவி

மாணவர்களுக்கு உதவி

ஜூலி தனக்கு வரும் வருமானத்தில் சொந்த வீடு கூட வாங்கிக் கொள்ளாமல் ஏழை மாணவர்களின் படிப்பு செலவுக்காக உதவி செய்து வருவது தாடி பாலாஜியின் கேள்வியால் ரசிகர்கள் தெரிந்து கொள்ள உதவியது. அதை ஏன் வெளியே சொல்லல என கேட்டதற்கு அதை சொன்னால் கூட நெட்டிசன்கள் திட்டுவாங்க என தனக்கு நேர்ந்த சோஷியல் மீடியா புல்லிங் பற்றியும் துணிச்சலாக பேசினார்.

காரித்துப்பினாங்க

காரித்துப்பினாங்க

பிக் பாஸ் முதல் சீசனில் நடந்த 5 செகண்ட் குறும்பட வீடியோ, வயித்த வலிக்குதுன்னு சொன்னது பற்றியெல்லாம் ஜூலியிடம் சுரேஷ் தாத்தா, அபிராமி உள்ளிட்டோர் கேள்வி கேட்டனர். அதை எல்லாம் மறந்து விட்டதாகவும், தற்போது அது பற்றி பேச வேண்டாம் என்றும் கூறிய ஜூலி, பிக் பாஸ் முடிந்து வெளியே வந்ததும் பலரும் தன்னையும் தன் குடும்பத்தினரையும் கேவலமாக திட்டினர். சிலர் காரித்துப்பினாங்க. ஆனால், அவர்களுக்கு எல்லாம் என்னை பற்றி ஒன்றுமே தெரியாது என்றார்.

நமக்காக வாழணும்

நமக்காக வாழணும்

மத்தவங்க என்ன சொல்றாங்க என்பது எனக்கு முக்கியமில்லை. நான் எனக்கான வாழ்க்கையை வாழுறேன் என்னை நம்பி என் அம்மா, அப்பா, தம்பி இருக்காங்க.. அவங்களுக்காக தான் நான் உழைச்சிட்டு இருக்கேன் என தனது ஒட்டுமொத்த சோகக் கதைகளையும் சொல்லி ஹவுஸ்மேட்களையும், ஆடியன்ஸையும் அழ வைத்து விட்டார்.

தற்கொலை பண்ணிக்கிறாங்க

தற்கொலை பண்ணிக்கிறாங்க

ஒரே ஒரு கமெண்ட் தப்பா போட்டதுக்கு எல்லாம் சிலர் தற்கொலை பண்ணிக் கொள்ளும் நிலைமை இந்த சமுதாயத்தில் இருக்கு. அப்ஸ் அண்ட் டவுன் இருந்தால் தான் சிறப்பு. கீழ விழுந்து பின்பு எழுந்திருக்கிறவங்க தான் வரலாறுல இடம் பிடிச்சிருக்காங்க என செம மெச்சூரிட்டியாகவும் பாசிட்டிவ் வைப்ரேஷன் உடனும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்து தனது ஸ்கோரை உயர்த்தி விட்டார் ஜூலி.

சனம் ஷெட்டி சப்போர்ட்

சனம் ஷெட்டி சப்போர்ட்

பிக் பாஸ் அல்டிமேட்டில் நடிகையும் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளரான சனம் ஷெட்டியை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் பண்றாங்க.. சுருதியை வெளியே அனுப்பியது போலவே சனம் ஷெட்டியையும் அதிரடியாக வெளியே அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜூலியின் மெச்சூரிட்டியான பேச்சை கேட்ட சனம் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு ஆதரவு அளித்து ட்வீட் போட்டுள்ளார்.

குவியும் ஓட்டுக்கள்

குவியும் ஓட்டுக்கள்

இந்த பிரஸ் மீட் டாஸ்க்கை யார் சரியாக பயன்படுத்திக் கொண்டார்களோ இல்லையோ? ஜூலி சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். கடைசி இடத்தில் இருந்த ஜூலி இந்த பிரஸ் மீட்டுக்கு பிறகு சரசரவென வாக்குகளை அள்ளி 8.48% வாக்குகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இப்படியே ஜூலியின் கேம் தொடர்ந்தால் கடைசி வரை அவர் செல்வார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கடைசி இடத்தில் வனிதா

கடைசி இடத்தில் வனிதா

பிரஸ் மீட் வாய்ப்பை சிறப்பாக தொடங்கிய வனிதாவுக்கு பாலாஜி முருகதாஸ் குறுக்கே புகுந்து வைத்த வேட்டு அவரை டென்ஷன் ஆக்கி பத்திரிகையாளர்களாக இருந்தவர்களை ஆஃப் செய்யும் விதமாக பேச ஆரம்பித்தார். ஜூலி முன்னேறிய நிலையில், கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் வனிதா விஜயகுமார். அவருக்கு மிக நெருக்கமாக சுரேஷ் மற்றும் அபிநய் கடைசி இடத்துக்கான போட்டியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X