அந்த ஷோவே எனக்கு செட் ஆகவில்லை.. அங்கே ஜனநாயகம் இல்லை.. விஜே பார்வதி ஓபன் டாக்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் விஜே பார்வதியும், கம்ருதீனும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இரண்டு பேரையும் வீட்டை விட்டு வெளியேற்றியது அனைவரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படியான ஆட்களுக்கு இது மாதிரிதான் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் சோஷியல் மீடியாக்களில் கமெண்ட்ஸ் பறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தொடங்கியதிலிருந்து டைட்டில் அடிக்கக்கூடியவர்களில் ஒருவராக விஜே பார்வதி இருந்தார். அவரது செயல்பாடுகள் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்தாலும்; 90 நாட்கள்வரை வீட்டில் வலுவான போட்டியாளராக ஜொலித்துகொண்டிருந்தார். அப்படிப்பட்ட சூழலில்தான் வீட்டில் இருந்த ஒன்பது பேருக்கும் இறுதிச்சுற்றுக்கு செல்வதற்கான டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ்.

நடந்த அசம்பாவிதம்: அதற்கு முன்னதாகவே சான்ட்ராவுக்கும், விஜே பார்வதி மற்றும் கம்ருதீனுக்கும் இடையே வாய் தகராறு ஓடியிருந்தது. சூழல் இப்படி இருக்க அந்த டாஸ்க்கில் காரில் தனக்கு அருகே அமர்ந்திருந்த சான்ட்ராவை எட்டி உதைத்தார் பார்வதி. அதற்கு கம்ருதீனும் சப்போர்ட் மற்றும் உதவியை செய்தார். தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கீழே விழுந்த அவருக்கு பேனிக் அட்டாக்கும் வந்துவிட்டாது. உடனே மருத்துவ குழு வந்து சிகிச்சை அளித்தது. விக்கல்ஸ் விக்ரம், சபரி, கானா வினோத் ஆகியோர் தங்களால் முடிந்த உதவியை செய்தார்கள்.

After Bigg Boss Red Card Exit VJ Parvathi s Speech Video Goes Viral in Social Media
Photo Credit:

ரெட் கார்டு: விஜே பாரு மற்றும் கம்ருதீனின் அந்த செயல் அனைவரிடமும் கண்டனத்தை பெற்றது. அதனையடுத்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் விஜய் சேதுபதி. ரெட் கார்டு பெற்றதை அடுத்து சான்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார்கள். 90 நாட்கள்வரை இருந்த அவர்கள்; கோபத்தில் செய்த செயலால் மோசமான பின்விளைவுகளை சந்தித்துவிட்டார்கள். இந்நிலையில் பிக்பாஸில் ரெட் கார்டு பெற்று வெளியே வந்த பிறகு விஜே பார்வதி பேசியதாக சொல்லி ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் பரவிவருகிறது.

விஜே பார்வதி வீடியோ: அந்த வீடியோவில் அவர், "நாம் பேச வேண்டும், ஃபெர்ஃபார்ம் செய்ய வேண்டும் என்றாலே ஒரு ஸ்பேஸ் இருக்காது. எனக்கு அந்த ஷோவே செட் ஆகவில்லை. முதலில் ஒரு போட்டி இருக்கும் இடத்தில் உங்கள் வொர்த்தை நீங்கள் நிரூபித்துதான் ஆக வேண்டும். நீங்கள் சரிக்கு சமமாக போட்டி போட்டு பேச வேண்டும். அப்போதுதான் உங்களது திறமையை நீங்கள் காட்ட முடியும். நிறைய பேரவை அவமானப்படுத்தும் விதமாக அந்த ஷோவில் நடந்திருக்கிறது.

ஃபார்மெட்டே அப்படித்தான்: அந்த டெலிவிஷனின் ஃபார்மெட்டே அப்படித்தான். ஒரு ஷோவில் யார் யார் வெளியே தெரிய வேண்டும் என்பதை ஒரு சிலர் சேர்ந்து முடிவு செய்கிறார்கள் எனில் அங்கு ஜனநாயகம் இல்லை. எனக்கு ஜாலியாக காமெடி செய்துகொண்டெல்லாம் இருக்க தெரியாது. அதனால்தான் ரியாலிட்டி ஷோக்கள் எனக்கு செட்டாவதில்லை. எனது வீட்டில் உண்மையை தைரியமாக பேச வேண்டும் என்றுதான் சொல்லி வளர்த்திருக்கிறார்கள்" என்றார். இந்த வீடியோதான் இப்போது காட்டு தீ போல் பரவிவருகிறது. அதேசமயம் இது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எடுக்கப்பட்ட வீடியோ இல்லை என்பதும், சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு அவர் வெளியிட்ட வீடியோ என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை பார்த்த ரசிகர்களோ, ரியாலிட்டி ஷோ செட் ஆகவில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார். பிறகு ஏன் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவுக்கு வந்தார் என்று சகட்டுமேனிக்கு கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X