Don't Miss!
- News
ஞானவாபி மசூதி விவகாரம்.. நீதிமன்றம் சென்ற முஸ்லீம் அமைப்பினர்! இன்று வாரணாசி கோர்டில் விசாரணை
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Finance
இன்று தங்கம் விலை எப்படியிருக்கு.. கூடிருக்கா.. குறைஞ்சிருக்கா..!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆஹா...பார்க்கவே செமயா இருக்கே...வருண் யாரை மீட் பண்ணிருக்கார் பாருங்க
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான வருண், பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு மற்றொரு பிக்பாஸ் பிரபலத்தை சென்று சந்தித்துள்ளார். இந்த ஃபோட்டோ மற்றும் வீடியோ லைக்குகளை அள்ளி வருகிறது.
பரிமளா திரையரங்கம், தலைவா ஆகிய படங்களில் சிறிய ரோல்களில் நடித்திருந்தாலும், ஒரு நாள் இரவில் படத்திற்கு பிறகே நடிகராக அடையாளம் காணப்பட்டார் வருண். போகன், வனமகன், நெருப்பு டா, எல்கேஜி, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பைனலை
நெருங்கும்
பிக்பாஸ்
நிகழ்ச்சி…
அடுத்தடுத்து
டாஸ்க்
கொடுக்கும்
பிக்பாஸ்!

ரிலீசுக்கு தயாரான ஜோஸ்வா
தற்போது வருண் லீட் ரோலில் நடித்துள்ள ஜோஸ்வா இமை போல் காக்க படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருண், பழம்பெரும் நடிகர் ஐசரி வேலனின் பேரனும், ஐசரி கணேசனின் உறவினரும் ஆவார். தற்போது வருண் நடித்துள்ள ஜோஸ்வா படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் தான் தயாரித்துள்ளது.

பிக்பாஸில் டிரைலர் ரிலீஸ்
ஜோஸ்வா படத்தில் நடித்து முடித்த கையோடு பிக்பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சென்று விட்டார் வருண். பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமான வருண், 86 வது நாளில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறிய அன்று, பிக்பாஸ் மேடையில் கமலால், வருண் நடித்த ஜோஸ்வா படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

பிரபலங்களுடன் சந்திப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த வருணை, ஏற்கனவே பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஐக்கி பெர்ரி, அக்ஷரா, இமான் அண்ணாச்சி, சஞ்சீவ் போன்றோர் சந்தித்தனர். தொடர்ந்து தனது நண்பர்கள் உள்ளிட்டோரை சந்தித்த ஃபோட்டோக்களை வருண் தினமும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் வருண் தன்னை வந்து சந்தித்த ஃபோட்டோ மற்றும் வீடியோவை மற்றொரு பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்துள்ளார்.

இவரை சந்தித்தாரா
அது வேறு யாருமில்லை, பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் தான். ஆரியை தான் வருண் சென்று சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் சந்தித்து பேசிய வீடியோவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும், லைக்குகளையும் குவித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகிறார்கள்.

இப்போது பயணம் ஆரம்பம்
வருண் தன்னை சந்தித்த வீடியோவை பகிர்ந்துள்ள ஆரி, தம்பி வருண் உடனான சந்திப்பு மிக சந்தோஷமாக உள்ளது. கண்டிப்பாக பிக்பாஸ் உங்களுக்கு கடினமான பல பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கும். நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். பிக்பாஸில் உங்களின் பயணம் தான் முடிந்திருக்கிறது. சினிமா உலகில் உங்களின் பயணம் இப்போது தான் துவங்கி இருக்கிறது. உங்களின் பயணத்திற்கு எனது இனிய வாழ்த்துக்கள் ப்ரோ என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

பல படங்களில் பிஸி
பிக்பாஸ் சீசன் 4 ல் பெரும்பாலானவர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக இருந்த ஆரி, தனக்கென பெரிய அளவிலான ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். தற்போது பகவான், உதயநிதி ஸ்டாலினுடன் நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.