விஜே பார்வதியுடனான பிக்பாஸ் உறவு.. அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் கம்ருதீன்.. அவர் முடிவு இதுதான்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனிலிருந்து விஜே பார்வதியும், கம்ருதீனும் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்கள். அதற்கு பிறகு சில நாட்கள் சைலெண்ட்டாக இருந்தார்கள். சூழல் இப்படி இருக்க கம்ருதீனுக்கு ஆட்டம் பாட்டத்துடன் அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் கோலாகலமாக வரவேற்பை கொடுத்தார்கள். அதுதொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் விஜே பார்வதி அல்லது கம்ருதீன் ஆகியோரில் ஒருவர் டைட்டில் வின்னராக வருவார்கள் என கணிக்கப்பட்டிருந்தது. இரண்டு பேரும் அதற்கு ஏற்றபடி விளையாடினாலும்; சக போட்டியாளர்களிடம் நடந்துகொண்ட விதம் பெரிய பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. முக்கியமாக இரண்டு பேரும் அந்த வீட்டுக்குள் இருந்தபோது More than friends என்ற ரிலேஷன்ஷிப்பையும் உருவாக்கினார்கள்.
எட்டி உதைத்த பாரு: இரண்டு பேருமே நெருக்கமாக பழகிவிட்டார்கள் என்பதால்; விளையாட்டில் சேர்ந்தே விளையாடினார்கள். அப்படித்தான் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது காருக்குள் தனக்கு அருகில் அமர்ந்திருந்த சாண்ட்ராவை எட்டி உதைத்தார் விஜே பார்வதி. அதற்கு கம்ருதீனும் உதவி செய்து; தனது ஆதரவை கொடுத்தார். விஜே பாரு மற்றும் கம்ருதீனின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி பெரிய விவாதத்தை கிளப்பியது.

ரெட் கார்டு பெற்ற போட்டியாளர்கள்: உடனடியாக அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. அதன்படி விஜய் சேதுபதியும், பிக்பாஸும் பாருவுக்கும், கம்ருதீனுக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிவிட்டார்கள். பிக்பாஸ் வரலாற்றிலேயே ஒரு பெண் போட்டியாளர் ரெட் கார்டு வாங்குவதும்; இரண்டு போட்டியாளர்கள் சேர்ந்து ரெட் கார்டு பெறுவதும் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
எதுவும் இல்லை: பாதியிலேயே ரெட் கார்டால் வெளியேறிவிட்டதால்; அவர்கள் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்ததற்கான சம்பளம் வழங்கப்படாது. இது அவர்களுக்கு பெரிய இழப்பாகும். வீட்டிலிருந்து வெளியே வந்த அவர்கள் சைலெண்ட் மோடுக்கு போனார்கள். தன்னுடைய ஆதரவாளர்கள் தனக்கு ஆதரவாக வைத்த போஸ்ட்டுகளை எல்லாம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வைத்திருந்தார் பார்வதி. கம்ருதீன் என்ன செய்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது.
கோலாகலமான வரவேற்பு: இந்நிலையில் அவருக்கு அவருடைய நண்பர்களும் குடும்பத்தினரும் கோலாகலமான வரவேற்பை கொடுத்தார்கள். தாரை தப்பட்டை முழங்க; மாலை அணிவித்து வரவேற்றார்கள். அப்போது அங்கே இருந்த ரசிகர்களோ, விஜே பார்வதியை மீட் பண்ணுவீங்களா என கேட்டார்கள். அதற்கு விரைவில் மீட் செய்வேன் என்பதுபோல் ரியாக்ஷன் கொடுத்தார் கம்ருதீன். இதனால் அவர்கள் விரைவில் நேரில் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதை பார்த்த ரசிகர்கள், கம்ருதீன் போகிற போக்கை பார்த்தால் பிக்பாஸ் வீட்டுக்குள் உருவான பாருவுடனான உறவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிடுவாரோ என்று கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











