சந்திரமுகி கங்கனாவை தொடர்ந்து ஜெயிலர் தமன்னாவும் ஆஜர்.. புதிய நாடாளுமன்றத்தில் நடிகைகள் அணிவகுப்பு!

டெல்லி: புதிய நாடாளுமன்றத்திற்கு இன்று நடிகை தமன்னா வருகை தந்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 33 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து பேசியிருப்பது சமூக வலைதளங்களில் டாப் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.

#TamannaahBhatia ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து தமன்னாவின் புகைப்படங்கள் மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை அவர் பார்வையிட்ட வீடியோ காட்சிகளை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

After Chandramukhi Kangana Ranaut now Jailer Tamannaah Bhatia visits New Parliament

நடிகை தமன்னாவுடன் இணைந்து பாலிவுட் நடிகையான திவ்யா தத்தாவும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பார்வையிட்டார். முன்னதாக நடிகை கங்கனா ரனாவத் சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்துக்கு விசிட் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகி கங்கனா ரனாவத்: பாஜக ஆதரவாளராக வலம் வரும் நடிகை கங்கனா ரனாவத் சில தினங்களுக்கு முன்னதாக புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றத்தை பார்வையிட்டார். நடிகைகளை வரிசையாக நாடாளுமன்றத்திற்கு பார்வையிட பாஜக அரசு அனுமதி அளித்து வருகிறது. பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத் தான் சந்திரமுகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

After Chandramukhi Kangana Ranaut now Jailer Tamannaah Bhatia visits New Parliament

ஜெயலலிதா பயோபிக் போல உருவான தலைவி படம் கங்கனாவுக்கு பெரிதாக கை கொடுக்காத நிலையில், சந்திரமுகி 2 மீது பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார் கங்கனா ரனாவத்.

பாலிவுட் நடிகைகள் அணிவகுப்பு: நேற்று பாலிவுட் நடிகைகளான ஷெனாஸ் கில் மற்றும் புமி பெட்னேகர் உள்ளிட்டோர் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை கூறியிருந்தனர். இந்நிலையில், இன்று நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகை திவ்யா தத்தா உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தை பார்வையிட்டுள்ளனர்.

After Chandramukhi Kangana Ranaut now Jailer Tamannaah Bhatia visits New Parliament

நாடாளுமன்றத்தை பார்வையிட்ட தமன்னா: வரிசையாக நடிகைகள் நாடாளுமன்றத்தை பார்வையிட்டு வரும் நிலையில், நடிகை தமன்னா சிகப்பு நிற சேலை அணிந்து கொண்டு செம க்யூட்டாக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த காட்சிகள் தற்போது தீயாக பரவி வருகின்றன.

சாமானியர்களும் அரசியலுக்கு வருவார்கள்: பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த நடிகை தமன்னா, இது ஒரு நல்ல முயற்சி, இதன் மூலம் சாமானிய மக்களும் அதிகளவில் அரசியலில் ஈடுபாடு செலுத்துவார்கள் என தனது கருத்தை முன் வைத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தமன்னா அடுத்தடுத்து பல படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X