பா.ரஞ்சித் - கமல் இணையும் படம் எப்போ?...புதிய அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்

சென்னை : சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு டைரக்டர் பா.ரஞ்சித் இயக்க உள்ள படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆர்யாவை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக பா.ரஞ்சித் தெரிவித்தார்.

Recommended Video

Chiyaan 61 Movie Pooja | Pa Ranjith | Vikram | Studio Green & Neelam Productions | *Kollywood

இதற்கிடையில் விக்ரம் ஆடியோ விழாவில கலந்து கொண்ட பா.ரஞ்சித், விரைவில் கமலை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக மேடையில் தெரிவித்தார். ஆனால் அந்த படம் பற்றி வேறு எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.

அதே சமயம் விக்ரம் படத்திற்கு பிறகு, மகேஷ் நாராயணன் படத்தில் தான் தான் நடிக்க உள்ளதாக கமல் தெரிவித்தார். இதனால் கமல் - பா.ரஞ்சித் இணையும் படம் எப்போது துவங்கப்படும் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்துடன் இருந்தனர்.

கமல் -பா.ரஞ்சித் படம் வருமா? வராதா?

கமல் -பா.ரஞ்சித் படம் வருமா? வராதா?

ஏனெனில் கமல் வரிசையாக பல படங்களில் கமிட்டாகி வருகிறார். கிட்டதட்ட 10 படங்களை கையில் வைத்து, அடுத்தடுத்து நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் பா.ரஞ்சித் தனது புதிய படத்தின் வேலைகளை இன்று துவக்கி உள்ளார்.இதனால் பா.ரஞ்சித், கமல் இணையும் படம் வருமா, வராதா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

பூஜையுடன் துவங்கிய சியான் 61

பூஜையுடன் துவங்கிய சியான் 61

நடிகர் விக்ரமின் 61 வது படத்தை தான் ரஞ்சித் தற்போது இயக்க உள்ளார். சியான் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷுட்டிங், சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டது. பா.ரஞ்சித், விக்ரம், ஜி.வி.பிரகாஷ், ஞானவேல்ராஜா, நடிகர் சிவக்குமார், ஆர்யா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

 கேஜிஎஃப்.,கே டஃப் கொடுக்க போறாங்க

கேஜிஎஃப்.,கே டஃப் கொடுக்க போறாங்க

இந்த படம் தமிழில் உருவாகும் கேஜிஎஃப். இதுவும் பீரியாடிக் படம் தான். கேஜிஎஃப் படமாக்கப்பட்ட அதே லொகேஷன்களில் இந்த படமும் பெரிய பட்ஜெட்டில் படமாக்கப்பட உள்ளதாகவும், 3டியிலும் இந்த படத்தை எடுக்க உள்ளதாகவும், 2023 ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த படம் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் பா.ரஞ்சித் தெரிவித்தார்.

சியான் 61ல் இவங்களும் நடிக்கிறாங்களா

சியான் 61ல் இவங்களும் நடிக்கிறாங்களா

சியான் 61 படத்திற்கு மைதானம் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் பூஜையில் சிவக்குமார் மற்றும் ஆர்யா கலந்து கொண்டதால் இவர்கள் இருவரும் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக மற்றொரு தகவல் பரவி வருகிறது. விக்ரம் நீளமான முடியுடன் வித்தியாசமான லுக்கில் வந்திருந்தார்.

செம தகவலா இருக்கே

செம தகவலா இருக்கே

இந்நிலையில் விக்ரம் நடிக்கும் சியான் 61 படத்திற்கு பிறகு பா.ரஞ்சித், கமலை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சியான் 61 படத்தை முடித்த கையோடு கமல் பட வேலைகளை துவக்க போகிறாராம். கமலை வைத்து இயக்க போகும் படத்திற்கான கதையை ரஞ்சித் ஏற்கனவே தயார் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கமலுக்கான கதையை படிப்படியாக டெவலப் செய்து விரைவில் முழு கதையையும் முடித்து கமலிடம் காட்டி, அடுத்த கட்ட பேச்சுவார்த்தையும் துவக்க போவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. கமலுடன் பா.ரஞ்சித் இணைந்தால் வேற லெவலில் படம் இருக்கும். இந்த தகவலால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X