பெட்டியுடன் ஒரு விக்கெட் அவுட்.. அப்போ இந்த வாரம் வெளியேற போறது இவர் தானா? ரொம்ப கனவு கண்டாரே!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் இன்று பெட்டியுடன் சிபி எஸ்கேப் ஆக போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த வாரம் யார் குறைவான ஓட்டுக்களுடன் வெளியேறுவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பணப்பெட்டி வந்ததில் இருந்தே பித்து பிடித்தது போல இருந்தவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.

பணப்பெட்டி வந்ததும் நான் எடுத்துக் கொண்டு வெளியேறிவிடுவேன் என சொன்ன அவர் கடைசி வரைக்கு எடுக்காமல் இந்த வாரம் எவிக்ட் ஆகி தலையில் கை வைத்துக் கொள்ள போகிறார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

குல்லாவை கழட்டுவதே இல்லை

குல்லாவை கழட்டுவதே இல்லை

பெண் போட்டியளர்களை விட நிரூப்புக்கு அதிக அளவில் தலைமுடி இருப்பதாக பிக் பாஸ் வீட்டிற்குள் வருபவர்கள் மற்றும் ஒரு வாரம் கமலுக்கு பதிலாக வந்த ரம்யா கிருஷ்ணனும் கண் வைத்த நிலையில், இப்போதெல்லாம் தலையில் இருந்து குல்லாவை கழட்டுவதே இல்லை நிரூப். அதுதான் காரணமா? அல்லது இந்த கேமில் தோற்று விடுவோம் என்கிற பயமா? என்றும் நெட்டிசன்கள் குல்லா போட்டு சுத்தும் நிரூப்பை கலாய்த்து வருகின்றனர்.

சிபியின் செய்கை

சிபியின் செய்கை

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து சிபியின் செய்கை தரமாக இருந்து வந்த நிலையில், தற்போது ரூ. 12 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறி நிரூப், அமீர் மற்றும் தாமரைக்கு அல்வா கொடுத்துள்ளார் சிபி. நிரூப் சிபியின் தன்னம்பிக்கையை உடைத்ததும் நல்ல விஷயம் தான் என சிபியின் ரசிகர்கள் நிரூப்பை பாராட்டி வருகின்றனர்.

குறைவான ஓட்டுக்கள்

குறைவான ஓட்டுக்கள்

ரூ. 12 லட்சத்துடன் சிபி இன்றே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ள நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மூன்றாவது இடத்தில் இருந்த நிரூப்பை சிபி அடித்து இறக்கி விட்டு வெளியேறி உள்ள நிலையில், குறைவான ஓட்டுக்களுடன் நிரூப் எவிக்ட் ஆகும் நிலையில் உள்ளார்.

மேலும் இருவர்

மேலும் இருவர்

அன் அஃபிஷியல் போலிங்கில் தற்போது பாவனி, தாமரை மற்றும் நிரூப் ஆகிய மூவர் தான் கடைசி இடத்தில் உள்ளனர். மூவரும் தலா 14 சதவீத வாக்குகளுடன் உள்ளனர். அதில், பாவனி, தாமரைக்கு அடுத்த இடத்தில் கடைசியாக நிரூப் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பை பை நிரூப்

பை பை நிரூப்

ஏகப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ப்ளூ ப்ரின்ட் உடன் வந்த நிரூப்புக்கு இந்த சீசனில் பரீட்சையே வேறு விதமாக மாறிய நிலையில், பெருசாக கெத்துக் காட்ட முடியவில்லை. நிரூப் ஸ்ட்ராட்டஜிகளை போட்டு விளையாடி வரும் நிலையில், ஒரு வேளை பணத்தையாவது எடுத்து செல்வாரா? என்று பார்த்தால் அதிலும் ஜீரோவாகி விட்டார்.

இறுதி வாரத்திற்குள் யார்

இறுதி வாரத்திற்குள் யார்

சிபி மற்றும் நிரூப் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் பட்சத்தில் டிக்கெட் டு ஃபினாலே வின்னர் அமீர், மக்களின் வின்னர் ராஜு, ரசிகர்களுக்கு பிடித்தமான பிரியங்கா, சாமானியர்களின் பிரதிநிதி தாமரை மற்றும் அழகு குயின் பாவனி ஆகிய 5 பேர் பிக் பாஸ் தமிழ் 5 சீசனின் இறுதி வாரத்திற்குள் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டுக்கள் மாறும்

ஓட்டுக்கள் மாறும்

இதுவரை சிபிக்கு ஓட்டுப் போட்டு வந்தவர்கள் பணப்பெட்டியுடன் அவர் வெளியேறிய நிலையில், நிச்சயம் அந்த ஓட்டுக்களை ராஜு மற்றும் தாமரைக்கே செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக கூட நிரூப் கடைசி இடத்திற்கு தள்ளப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஃபைனல்ஸில் மூன்று பெண் போட்டியாளர்கள் இடம்பிடித்தால் அதுவும் சூப்பரான விஷயம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X