ஜார்ஜியா படப்பிடிப்பு ஓவர்...சென்னை திரும்பிய விஜய்...வைரலாகும் ஃபோட்டோஸ்

சென்னை : விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 65 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 2021 இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 9 ம் தேதி ஜார்ஜியாவில் துவங்கி நடைபெற்ற வந்தது. இந்நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு, தளபதி 65 படக்குழு இன்று காலை சென்னை திரும்பி உள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 26 ம் தேதி அல்லது ஏப்ரல் 28 ம் தேதி துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

திட்டத்தை மாற்றிய படக்குழு

திட்டத்தை மாற்றிய படக்குழு

முதலில், ஏப்ரல் 28 ம் தேதி ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிவும், மே மாதத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டதற்கு முன்பே படக்குழு சென்னை திரும்பி உள்ளது.

அடுத்த சூட்டிங் சென்னையில்

அடுத்த சூட்டிங் சென்னையில்

இரண்டாம் கட்டமாக சென்னையில் ஒரு பாடல் படமாக்கப்பட உள்ளதாம். இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் சில காட்சிகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா பரவல் நிலையை பொறுத்து இந்தியாவில் நடத்தப்படும் படப்பிடிப்பின் அட்டவணை திட்டத்தை முடிவு செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தளபதி 65

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தளபதி 65

மாஸ்டர் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து, தளபதி 65 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் பொங்கல் ரிலீசாக மாஸ்டர் வெளியிடப்பட்டதால் 2021 ம் ஆண்டை வெற்றி படத்துடன் துவக்கி உள்ளார் விஜய். தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்திற்கு அவருக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரம்மாண்டமாக தயாராகி வரும் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 வைரலாகும் விஜய் ஃபோட்டோ

வைரலாகும் விஜய் ஃபோட்டோ

ஜார்ஜியா படப்பிடிப்பை முடித்து சென்னை விமான நிலையம் வந்த விஜய்யின் ஃபோட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாஸ்க் அணிந்து, முகத்தை மறைத்தபடி விஜய் வந்தாலும் அவரை அடையாளம் கண்ட சிலர், ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

வெள்ளை சட்டையில் விஜய்

வெள்ளை சட்டையில் விஜய்

இந்த ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் அதிகம் பகிரும் விஜய் ரசிகர்கள் சிலர், விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளை சட்டையில் வந்துள்ளதையும் குறிப்பிட்டு கருத்து பதிவிட்டுள்ளனர். தேர்தலில் ஓட்டுப் போட வந்த போதும், படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்ற போது, தளபதி 65 பூஜைக்கு வந்த போது என சமீப நாட்களில் விஜய் வெள்ளை சட்டை அணிந்து வரவில்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X