Actor Jayam Ravi: அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் இணையும் ஜெயம் ரவி.. அப்ப தனி ஒருவன் 2?

சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது. ஆனால் அடுத்தடுத்து ரிலீசான இறைவன் மற்றும் சைரன் படங்கள் சொதப்பலான ரிசல்ட்டையே கொடுத்தன.

இந்நிலையில் அடுத்ததாக பிரதர், ஜெனீ, காதலிக்க நேரமில்லை படங்களில் இணைந்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படங்களின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த சூழலில் அடுத்தடுத்து படங்களின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜுடன் ஜெயம் ரவி இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Jayam ravi Pandiraj Jenie Kadhalikka neramillai brother tamil cinema

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி மினிமம் கேரன்டி ஹீரோவாக தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்த படங்களாக வெளியான இறைவன் மற்றும் சைரன் படங்கள் கை கொடுக்கவில்லை. இந்நிலையில் அடுத்ததாக வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஜெயம் ரவி காணப்படுகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் ஜெனீ, பிரதர் மற்றும் காதலிக்க நேரமில்லை படங்கள் உருவாகி வருகின்றன. இந்த படங்களின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த சூழலில் அடுத்தடுத்த கமிட்மென்ட்களை அறிவித்து வருகிறார் ஜெயம் ரவி.

தனி ஒருவன் 2 படம்: அடுத்ததாக தன்னுடைய சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் அவர் இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த பிரச்சனைகள் நிலவி வருவதாகவும் அதனால் படத்தின் சூட்டிங் தள்ளி போவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்ததாக மோகன் ராஜாவும் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்த படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அவர் அஜித்திற்கு ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த இரு படங்களில் எதில் அவர் இணைவார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாண்டிராஜுடன் இணையும் ஜெயம் ரவி: இந்நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அப்டேட்டும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முன்னதாக சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கிய இயக்குனர் பாண்டிராஜ் அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் விஷாலை இயக்க கமிட்டான நிலையில், இந்தப் படம் தற்போது ஹோல்டில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயம் ரவியுடன் பாண்டிராஜ் இணையவுள்ளார். தற்போது ஜெயம் ரவி தனது கமிட்மெண்ட்களை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்வார் என்று கூறப்பட்டுள்ள சூழலில், இந்தப் படத்தின் சூட்டிங் ஜூலை மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதத்தில் அறிவிப்பு: இதனிடையே படம் குறித்த அறிவிப்பு வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தையும் முன்னதாக ஜெயம் ரவியின் சைரன் படத்தை தயாரித்திருந்த ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயம் ரவி அடுத்ததாக தனி ஒருவன் 2 படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த படம் தள்ளிப் போவதாக கூறப்பட்டுள்ள சூழலில் அடுத்ததாக பாண்டியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X