Rajinikanth - அரசியல் தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு..என்ன திட்டத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த்?

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) இமயமலை பயணத்தை முடித்துக்கொண்ட ரஜினிகாந்த் வட மாநிலங்களில் அடுத்தடுத்து அரசியல் தலைவர்களை சந்தித்துவருகிறார்.

இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடலில் சூப்பர் சுப்பு உசுர கொடுக்க கோடி பேரு என்று எழுதியதற்கு ஏற்ப அவருக்காக பல கோடி பேர் இருக்கிறார்கள். அவரது எளிமை, பேச்சு, நடை, உடை என அத்தனையையும் பலர் ஃபாலோ செய்துவருகின்றனர். அவர் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த படங்கள் ரஜினிக்கு சரியான வெற்றியை பெற்றுத் தரவில்லை.

After completing the Himalayas tour Rajinikanth is met political leaders successively

ஜெயிலர்: இப்படிப்பட்ட சூழலில்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். கடந்த 10ஆம் தேதி ரிலீஸான அந்தப் படம் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ரஜினி இதன் மூலம் கம்பேக் கொடுத்துவிட்டார் என்றும் அவரது ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். இதுவரை படமானது 375 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இமயமலையில் ரஜினி: ஜெயிலர் படத்தை உலகத்தில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் கொண்டாடிவருகின்றனர். ஆனால் ரஜினிகாந்த்தோ படம் ரிலீஸாவதற்கு சில நாட்களுக்கு முன்பு இமயமலைக்கு சென்றுவிட்டார். வழக்கமாக அவர் செல்லும் இடம் என்றாலும் இந்த முறை கொஞ்சம் ஸ்பெஷலாகவே பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் அங்கு செல்லவில்லை.

அது மட்டும் காரணம் இல்லை: நான்கு ஆண்டுகள் கழித்து செல்வதால் மட்டும் அவரது இந்த இமயமலை பயணம் ஸ்பெஷலாக பார்க்கப்படவில்லை. இதுவரை தன்னுடைய படத்தின் ரிலிஸுக்கு முன்னர் இமயமலைக்கு சென்றிருக்கிறாரோ அந்தப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவும் இந்தப் பயணத்தை அவர்கள் ஸ்பெஷலாக பார்த்தனர்.

பயணத்தை முடித்த ரஜினிகாந்த்: இமயமலைக்கு சென்ற அவர் பாபாஜி குகையில் தியானம் செய்தார். மேலும் பல ஆன்மீக தலங்களுக்கும் சென்றும் சாமி தரிசனம் செய்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இதனையடுத்து தனது பயணத்தை முடித்துக்கொண்ட அவர் நேராக தமிழ்நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ட்விஸ்ட்: ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக அரசியல் தலைவர்களை சந்தித்துவருகிறார்.முதலில் ஜார்க்கண் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த அவர் அடுத்ததாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் ஆனந்தி பென்னை சந்தித்தார். இதனையடுத்து இன்று மாலை அவர் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கவிருக்கிறார்.இதையெல்லாம் பார்த்த ரஜினி ரசிகர்கள் எதற்காக திடீரென இப்படி விசிட் அடித்துக்கொண்டிருக்கிறார். வெயிட்டாக எதும் பிளான் வைத்திருக்கிறாரோ என கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X