த்ரிஷாவைப் பாராட்டிய பார்த்திபன்.. புது வீடியோவை இறக்கி பிரச்னையை முடிச்சுட்டாப்ள
சென்னை: இயக்குநர் பார்த்திபன் சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் நடிகை த்ரிஷா குறித்து எதுகை மோனையாக பேசியது பெரும் சர்ச்சையானது. அது தொடர்பாக ரசிகர்கள் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி, அதற்கு த்ரிஷாவும் காட்டமான ரிப்ளே கொடுத்தார். இதனால் பார்த்திபன் தன் தரப்பு விளக்கத்தைக் கொடுத்து, மன்னிப்பும் கேட்டார். ஆனாலும் நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் பார்த்திபன் பெயரைக் குறிப்பிடாமல் விளாசிவிட்டார்.
இது தொடர்பாக தனது ஸ்டைலில் விளாசிவிட்ட பார்த்திபன் முதலில் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்த வீடியோவில் த்ரிஷா பெயரைக் குறிப்பிடாமலே பேசி வந்தார். அதன் தொடர்ச்சியாக அவர் பகிர்ந்த இரண்டாவது விடியோவில் நடிகை த்ரிஷாவை பாராட்டி உள்ளார். அதாவது, ஐயா நல்ல கண்ணு அவர்களின் மறைவின் போது இறுதி அஞ்சலி செலுத்தச் சென்றேன். அப்போது அவர் உடல் தானம் செய்துள்ளார் என்று கூறினார்கள். நான் அப்போது சொன்னேன் நானும் எனது மனைவியுமே கூட உடல் தானம் செய்துள்ளோம் என்றேன். வேறு யாரு எல்லாம் உடல் தானம் செய்துள்ளார்கள் என்று விசாரித்த போது நடிகை த்ரிஷாவும் உடல் தானம் செய்துள்ளதாக கூறினார்கள். எனக்கு அதைக் கேட்டு மகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு திரைப்பட நட்சத்திரம் என்பதையும் மீறி உடல் தானம் செய்ய முன் வந்துள்ள திரிஷாவுக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்களும் வாழ்த்துகளும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோவே சமீபத்திய சர்ச்சை தொடர்பாக நான் பதிவிடும் கடைசி வீடியோ எனவே யாரும் இனி இது குறித்து பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











