ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் பரவியது கொரோனா.. ரசிகர்கள் சோகம் #AishwaryaRaiBachchan

மும்பை: நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

Recommended Video

Aishwarya Rai Bachchan &Daughter Aradhya Tested Positive

முதல் முறையாக செய்யப்பட்ட பரிசோதனையில், நெகட்டிவ் என வந்த நிலையில், இரண்டாம் கட்ட பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், #AishwaryaRaiBachchan என்ற ஹாஷ்டேக்கில் அவரது ரசிகர்கள் பலர் கொரோனாவில் இருந்து ஐஸ்வர்யா ராய் மற்றும அவரது குடும்பத்தினர் மீண்டு வர வேண்டும் என உருக்கத்துடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யாவுக்கும்

ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யாவுக்கும்

நேற்று, அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், முதல் கட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயுக்கும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஜெயா பச்சன் நிலை

ஜெயா பச்சன் நிலை

இரு பச்சன்களுக்கும் கொரோனா பரவிய நிலையில், அமிதாப் பச்சனின் இல்லத்தை மும்பை சுகாதார துறை அதிகாரிகள் முற்றிலுமாக சோதனையிட்டு, யார் மூலமாக கொரோனா பரவியது என்ற கான்டாக்ட் டிரேஸிங்கை செய்து வருகின்றனர். குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு கொரோனா பரவி இருக்கும் நிலையில், அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு இரண்டாவது முறையாக நடத்தப்பட்டிருக்கும் பரிசோதனை ரிசல்ட்டுக்காக காத்திருக்கின்றனர்.

தந்தையும் மகனும்

தந்தையும் மகனும்

நானாவதி மருத்துவமனையில் நேற்று இரவு சேர்க்கப்பட்ட அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன்கள் இருவரும் நலமுடன் இருப்பதாகவும், இருவருக்கும் லேசான கொரோனா அறிகுறி தான் இருக்கிறது என்றும், இருவரும் தங்களது உணவினை உண்டு, இரவு நன்றாக உறங்கினார்கள் என அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அப்துல் சமாத் அன்சாரி தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஐஸ்வர்யா ராயுக்கு என்ன ஆச்சு என காலையில் இருந்தே ரசிகர்கள் #AishwaryaRaiBachchan என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் அவருக்கும் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த குடும்பமும் விரைவில் குணமடைய ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி தேவியாகவும், ராணி மந்தாகினியாகவும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய், உலக அளவில் அவருக்கு இருக்கும் பல கோடி ரசிகர்களும், இதுவும் கடந்து போகும், பூரணமாக குணமாகி மீண்டு வருவீர்கள் என வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X