சம்பளத்தை எக்குதப்பாக உயர்த்திய நடிகர் கவின்?.. எல்லாத்துக்கும் டாடா படம்தான் காரணம்!
சென்னை : நடிகர் கவின் சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து சின்னத்திரை சீரியலிலும் மாஸ் காட்டியவர்.
தொடர்ந்து விஜய் டிவியின் சரவணன் -மீனாட்சி தொடரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இறுதிச்சுற்று வரை வந்தவர்.
இந்த சீரியல் மற்றும் நிகழ்ச்சி கவினுக்கு மீண்டும் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. இவரது டாடா படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளது.

நடிகர் கவின்
நடிகர் கவின் சினிமாவில் சாதிக்கும் ஆசையில் கிடைத்த ரோல்களில் எல்லாம் நடித்து வந்தவர். தொடர்ந்து சின்னத்திரையில் தனக்கு கிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்டார். விஜய் டிவியின் சரவணன் -மீனாட்சி தொடரில் நடித்து ஏராளமான ரசிகர்களின் இதயத்தை கொள்ளைக் கொண்டார் கவின். இந்த சீரியல் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் வாய்ப்பு கவினுக்கு வீடு தேடி வந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுவரை வந்த கவினுக்கு இந்த நிகழ்ச்சியும் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. தொடர்ந்து கவின் நடிப்பில் அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்த டாடா படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடித்திருந்தார் கவின். இந்தப் படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாசின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்திருந்தது.

அமேசான் பிரைமில் டாடா படம்
இந்தப் படத்தில் பாக்கியராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில், படம் வெளியாகி சில தினங்களிலேயே பல கோடி வசூலை அள்ளியது. தற்போது அமேசான் ப்ரைமில் டாடா படம் வெளியாகியுள்ளது. ஓடிடியிலும் டாடா படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் எக்குதப்பான வரவேற்பு மற்றும் வசூலை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை கவின் உயர்த்தி விட்டாராம். கொஞ்சம் நஞ்சம் இல்லீங்க. ஒன்றரை கோடிக்கு தன்னுடைய சம்பளத்தை கவின் உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவியும் பட வாய்ப்புகள்
டாடா படத்தை தொடர்ந்து கவினுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் கவின். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாகவும். காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்தப் படமும் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கவினின் அடுத்தடுத்த படங்கள்
கடந்த 2019ம் ஆண்டில் வெளியான நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கவின். இந்த படம் அவருக்கு சரியாக கைக்கொடுக்காத நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து ஓடிடியில் நேரடியாக வெளியான லிப்ட் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக டாடா படமும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக வாணி போஜனுடன் இணைந்து ஊர்க்குருவி என்ற படத்தில் நடித்து வருகிறார் கவின்.


Click it and Unblock the Notifications











