STR 48: தீபிகா படுகோன் நோ சொன்னா என்ன? திஷா பதானியிடம் பேச சொன்ன சிம்பு.. பரபரக்கும் தகவல்!

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள 48வது படத்தின் ஹீரோயின் குறித்த தேடல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

முதன்முறையாக சிம்பு நடிக்கும் படத்தை 100 கோடி பட்ஜெட்டில் கமல் தயாரிக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்க உள்ளார்.

After Deepika Padukone STR 48 team talks up with Disha Patani?

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனிடம் அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறீங்களா என கேட்டதற்கு அவர் முடியாது என சொல்லி விட்டதாக தகவல்கள் பரவின.

பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோன்: ரன்வீர் சிங்கின் மனைவியும் இந்தி திரையுலகின் நம்பர் ஒன் நாயகியுமான தீபிகா படுகோன் பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தில் பெரிய சம்பளத்தில் நடித்து வருகிறார்.

After Deepika Padukone STR 48 team talks up with Disha Patani?

டோலிவுட் பக்கம் வந்த அவரை அப்படியே கோலிவுட்டில் சிம்புவுக்கு ஜோடியாக வளைத்துப் போடலாமே என நினைத்த நிலையில், சிம்புவுக்கு இணையான சம்பளத்தை அவர் கேட்டதாகவும், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க முடியாது என மறுத்ததாகவும் ஏகப்பட்ட தகவல்கள் வலம் வந்த நிலையில், அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பது மட்டும் உறுதியானது.

கீர்த்தி சுரேஷும் சிம்புவுக்கு ஜோடி இல்லையாம்: வரலாற்று படமாக உருவாக உள்ள சிம்புவின் 48வது படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என இன்னொரு தகவல்கள் வெளியான நிலையில், சிம்பு வேண்டவே வேண்டாம் என மறுத்து விட்டதாக கூறுகின்றனர்.

After Deepika Padukone STR 48 team talks up with Disha Patani?

நடித்தால் பாலிவுட் ஹீரோயின் உடன் தான் நடிப்பேன் தென்னிந்திய நடிகைகளே தேவையில்லை என சொன்ன சிம்பு இன்னொரு பிரபல பாலிவுட் நடிகையுடன் பேச்சுவார்த்தை நடத்த சொல்லி இயக்குநரிடம் சொல்லி உள்ளதாக ஹாட் தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

தீபிகா படுகோன் இல்லைன்னா திஷா பதானி: தீபிகா படுகோன் நடிக்க மறுத்த நிலையில், கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வரும் பிகினி பேபி திஷா பதானி உடன் பேச்சுவார்த்தை நடத்தலாமே என நடிகர் சிம்புவே இயக்குநருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் அட்வைஸ் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

After Deepika Padukone STR 48 team talks up with Disha Patani?

சூர்யாவுடன் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வரும் திஷா பதானி என்றால் சம்பளமும் குறைவாக கொடுத்து கிளாமரிலும் தாராளம் காட்டி அசத்தி விடலாம் என்கிற முயற்சியில் படக்குழுவினர் திஷா பதானியிடம் பேச முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

கூடிய விரைவிலேயே சிம்பு 48 படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X