அடுத்தடுத்த மாஸ் ஹீரோவுடன் டபுள் டமாக்கா...பட்டையை கிளப்பும் கர்ணன் தயாரிப்பாளர்
சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி எஸ்.தாணு. பல மெகாஹிட் வெற்றி படங்களைக் கொடுத்தவர் கலைப்புலி தாணு.
இவர் தனுஷை வைத்து பல வெற்றி படங்களை வைத்து கொடுத்துள்ளார். சமீபத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்த கர்ணன் படமும் மெகா ஹிட் ஆனது. தனுஷின் அண்ணன் செல்வராகவனை வைத்தும் கலைப்புலி தாணு ஒரு படத்தை தயாரித்து வருகிறார்.

விஜய் சேதுபதியுடன் 2 படங்கள்
லேட்டஸ்ட் தகவலின்படி, விஜய் சேதுபதியை வைத்து 2 படங்களை தயாரிக்க உள்ளாராம். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டதாக கூறப்படுகிறது. லாக்டவுன் முடிந்ததும் இந்த புதிய படத்தின் வேலைகள் துவங்கப்படலாம் என கூறப்படுகிறது.

வாய்ப்புக்களை இழக்கும் விஜய் சேதுபதி
தற்போதைய நிலவரப்படி தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. கால்ஷீட் பிரச்சனை காரணமாக பல பெரிய படங்களின் வாய்ப்புக்களைக் கூட விஜய் சேதுபதி இழந்து வருகிறார்.

சீனு ராமசாமி தான் டைரக்டர்
தற்போது விஜய் சேதுபதியை வைத்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படங்களில் ஒன்றை சீனு ராமசாமி தான் இயக்க போகிறாராம். தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், மாமனிதன் படங்களை தொடர்ந்து 5 வது முறையாக சீனு ராமசாமி, விஜய் சேதுபதியை இயக்க உள்ளார்.

மற்றொரு படத்திற்கு யார் டைரக்டர்
கலைப்புலி தாணு இயக்கும் மற்றொரு படத்தின் டைரக்டர் யார் என்பது விரைவில் முடிவு செய்யப்பட உள்ளது. இந்த படம் தொடர்பான படக்குழு உறுதி செய்யப்பட உடன் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

மாமனிதன் ரிலீஸ் எப்போது
அதே சமயம், சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படம் இதுவரை ரிலீஸ் செய்யப்படவில்லை. கொரோனா ஊரடங்கு, சரியான தேதி கிடைக்காதது போன்ற காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











