தனுஷை தொடர்ந்து ஹாலிவுட்டுக்கு செல்லும் ஸ்ருதிஹாசன்.. ‘தி ஐ’ பட போஸ்டரே சும்மா மிரட்டலா இருக்கே!

சென்னை: கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தனது 39வது பிறந்தநாளை நேற்றுமுன் தினம் கொண்டாடிய நிலையில், அவரது பிறந்தநாள் புகைப்படங்கள் ஒருபக்கம் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், அவரது அடுத்த படத்தின் போஸ்டரும் ஒட்டுமொத்த கோலிவுட்டையே வாயை பிளக்க வைத்துள்ளது. நடிகர் தனுஷ் போல ஸ்ருதிஹாசனும் ஹாலிவுட்டில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

காதல் தோல்வி காரணமாக படங்களில் பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன் இனிமே காதல், திருமணம் என்கிற பேச்சுக்கெல்லாம் இடமில்லை என்றும் கவனத்தை மொத்தமாக சினிமா பக்கமே திருப்பப்போவதாக முடிவெடுத்துள்ளார்.

shruti haasan the eye hollywood

பிரபாஸ் உடன் இணைந்து சலார் படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் தமிழில் விஜய் சேதுபதியுடன் ட்ரெயின் மற்றும் ரஜினிகாந்தின் கூலி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மீண்டும் பிரபாஸ் உடன் இணைந்து சலார் 2 படத்திலும் நடிக்க காத்திருக்கும் ஸ்ருதிஹாசன் தற்போது ஹாலிவுட்டிலும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

ஹாலிவுட் படத்தில் ஸ்ருதிஹாசன்: ஹாலிவுட் இயக்குநர் டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தி ஐ ' ( The Eye) எனும் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன், மார்க் ரௌலி, லிண்டா மார்லோவ், பெரு கவாலியேரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜேம்ஸ் செக்வின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஸ்விட்சர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் டயானா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பர்த்டே கிஃப்ட்: ஸ்ருதிஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இயக்குநரான டாட்னே ஷ்மோன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டு, 'அற்புதமான மற்றும் துணிச்சல் மிக்க ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் எப்போதும் எங்களின் 'டயானா'வாக இருப்பார். லண்டன், கிரீஸ், அமெரிக்கா மற்றும் இந்தியாவை சார்ந்த 'தி ஐ' படக் குழுவினர் இந்த பிரத்யேக நாளில் உங்களை போற்றுகிறோம். கொண்டாடுகிறோம் ஸ்ருதிஹாசன் '' என வாழ்த்தியுள்ளார்.

டயானாவாக மாறிய ஸ்ருதி: இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஸ்ருதிஹாசன்- டயானா கதாபாத்திரத்தில் நீல வண்ணத்தில் கழுத்தை மூடிய ஸ்வெட்டர் அணிந்து கவலையுடன் தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு நடிகை ஸ்ருதிஹாசன், மூன்று ஹார்ட்டின் எமோஜிகளுடன், 'நன்றி என் அன்பானவர்களே ' என பதிவிட்டு, தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படம் கிரேக்க நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் மற்றும் லண்டனில் நடைபெற்ற சுயாதீன படைப்புகளுக்கான திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டு அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கோலிவுட் நட்சத்திரமான ஸ்ருதிஹாசனுக்கு ஏராளமான பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமந்தாவுக்கு முன்னதாக: நடிகை சமந்தா ஹாலிவுட்டுக்குப் போகப் போகிறார் என்றும் சர்வதேச படத்தில் நடித்து வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த படம் குறித்த எந்தவொரு அறிவிப்பும் இல்லை. பாலிவுட் நடிகைகளான ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். அந்த வரிசையில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ள ஹாலிவுட் படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் தனுஷ் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், ஸ்ருதிஹாசனும் ஹாலிவுட் நடிகையாக மாறிவிட்டார். கூடிய சீக்கிரமே இருவரும் இணைந்து நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X