விஜய்க்காக பாட்டெழுதும் டாப் ஹீரோக்கள்...முதலில் தனுஷ், இப்போ இவர்
சென்னை : விஜய்யின் 65 வது படமான பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே விஜய் படம் என்பதால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் ஃபஸ்ட் மற்றும் இரண்டாவது லுக்கை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டனர் படக்குழுவினர். இந்த பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் கொஞ்சமும் குறைய விடாமல் வைத்துள்ளது படக்குழு வெளியிடும் அடுத்தடுத்த அப்டேட்கள்.

வில்லன் ரோலில் செல்வராகவன்
இந்த படத்தில் டைரக்டர் செல்வராகவன் மற்றும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாகோ இணைவதாக சமீபத்தில் ஒரு அப்டேட் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து இவர்கள் இருவருமே படத்தில் வில்லன் ரோலில் தான் நடிக்கிறார்கள் என அடுத்த அப்டேட்டை வெளியிட்டனர்.

யார் அந்த 3 வது வில்லன்
அதைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தில் மொத்தம் மூன்று வில்லன்கள் உள்ளனர். மூன்றாவது வில்லன் யார் என்பது மிகப் பெரிய சர்ப்ரைசாக இருக்கும் என்றனர். இதனால் அது யாராக இருக்கும் என யோசிக்க துவங்கி விட்டனர் ரசிகர்கள். ஆர்வக் கோளாறில் பல டாப் நடிகர்களின் பெயர்களையும் யூகித்து கருத்து கூறி வந்தனர்.

என்னது தனுஷ் வில்லனா
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்த படத்தில் தனுஷும் இணைவதாக அடுத்த அப்டேட்டை வெளியிட்டனர். இதனால் ஏற்கனவே படக்குழு அறிவித்த மூன்றாவது வில்லன் தனுஷா என கேள்வி எழுந்தது. மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைத்தது போல், பீஸ்ட்டில் தனுஷை நடிக்க வைக்க போகிறார்களா என கேட்க துவங்கி விட்டனர்.

பாட்டெழுத போகும் தனுஷ்
ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தனுஷ் பீஸ்ட் படத்தில் நடிக்கவில்லை. பாட்டெழுதி, அதனை அவரே பாட போகிறார் என அடுத்த அப்டேட்டை வெளியிட்டனர். ஏற்கனவே தான் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு தானே திரைக்கதை எழுதி, வசனம், பாட்டெழுதி அதை தானே பாட போவதாக கூறப்பட்ட நிலையில். விஜய் படத்திற்கும் தனுஷ் பாட்டெழுத உள்ளதாக வெளியான தகவலை விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடினர்.

சிவகார்த்திகேயனும் இருக்கார்
தற்போது அடுத்த அப்டேட்டாக பீஸ்ட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒரு பாடல் எழுத உள்ளதாக அறிவித்துள்ளனர். பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயனும் உள்ளார், அவர் பாடலுக்கு வரிகளை எழுத உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது டைரக்டர் நெல்சன் திலீப்குமார் அதனை உறுதி செய்துள்ளார்.

பாடகராக வெற்றி பெற்ற சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் ஏற்கனவே தான் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், கனா, டாக்டர் உள்ளிட்ட பல படங்களுக்கு பாட்டெழுதி, பாடியும் உள்ளார். அப்படி அவர் எழுதி பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகி உள்ளன. சமீபத்தில் பிக்பாஸ் கவின் ஹீரோவாக நடிக்கும் லிஃப்ட் படத்திலும் ஒரு பாடலை பாடி உள்ளார் சிவகார்த்திகேயன்.

வெற்றி கூட்டணி
சிவகார்த்திகேயன், டைரக்டர் நெல்சன் திலீப்குமார், இசையமபை்பாளர் அனித் கூட்டணி ஏற்கனவே டாக்டர் படத்தில் பணியாற்றி உள்ளது. நெருங்கிய நண்பர்களான இவர்கள் கூட்டணியில் டாக்டர் படத்திற்காக உருவாக்கப்பட்ட பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டன.

ஒன்றிணைந்த நண்பர்கள்
இதே போல் அனிருத், தனுஷ், சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பல பாடல்களை ஹிட் செய்துள்ளனர். அதனால் இந்த நண்பர்கள் கூட்டணியில் உருவாக போகும் பீஸ்ட் படமும் வேற லெவலில் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











