For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டாக்டர், பீஸ்ட்.. இப்போ ஜெயிலர்.. நெல்சனின் "பெயர் பிளான்தான்" என்ன? பான் இந்தியாவா, சென்டிமென்ட்டா?

  |

  சென்னை: ஆங்கில தலைப்பு வைத்து டாக்டர் படம் வெற்றிப் பெற்ற நிலையில், அடுத்ததும் பீஸ்ட் என நெல்சன் டைட்டில் வைத்தார். ஆனால், அதை வேஸ்ட் என ரசிகர்கள் தூக்கிப் போட்டு விட்டனர்.

  இந்நிலையில், தற்போது ரஜினிகாந்தின் 169வது படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைத்துள்ளார் இயக்குநர் நெல்சன்.

  அதனை ஃபெயிலியர் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்யாமல் இருந்தால், சரி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் போன்றவர்களின் படங்களுக்கே ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பதை எப்போது தான் மாற்றப் போகின்றனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

  தொடர்ந்து ட்ரெண்டிங்கில் தலைவர் 169 படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்புக்காக ரசிகர்கள் வெயிட்டிங்! தொடர்ந்து ட்ரெண்டிங்கில் தலைவர் 169 படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்புக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!

  நல்லா தான இருந்தாரு நெல்சன்

  நல்லா தான இருந்தாரு நெல்சன்

  சிம்புவுடன் இணைந்து பண்ண நினைத்த படத்திற்கு வேட்டை மன்னன் என தமிழில் தலைப்பு வைத்த இயக்குநர் நெல்சன், அந்த படம் டிராப் ஆனாலும், நயன்தாராவை வைத்து இயக்கிய முதல் படத்திற்கு கோலமாவு கோகிலா என தமிழிலேயே வித்தியாசமான தலைப்பை வைத்து தலைப்புக்காகவே தனி கவனம் பெற்றார். அந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

  டாக்டர்

  டாக்டர்

  ஆனால், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இயக்கிய டாக்டர் படத்திற்கு அப்படியொரு ஆங்கில தலைப்பை தேர்வு செய்தது கூட ஓகே படத்தில் அவர் மிலிட்ரி டாக்டராக வருகிறார். யோகி பாபு மற்றும் கடத்தல்காரர்களை பிடிக்க மருத்துவத்தை பயன்படுத்துகிறார் என ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.

  பீஸ்ட் ஏன்

  பீஸ்ட் ஏன்

  ஆனால், அடுத்தது நடிகர் விஜய்யை வைத்து அவர் இயக்கிய படத்துக்கு பீஸ்ட் என மறுபடியும் ஆங்கில தலைப்பு வைக்கப்பட்ட நிலையில், கடுமையான விமர்சனங்கள் அப்போதே கிளம்பின. பீஸ்ட் படம் வெளியான பிறகு ஷாப்பிங் மால் சுற்றித் தான் கதை என்றும் அது தொடர்பான தலைப்பை வைத்திருந்தால் ஆப்ட்டாக இருந்திருக்கும் என்றும் ஏகப்பட்ட கருத்துக்கள் கிளம்பின.

  ஒர்க்கவுட் ஆகல

  ஒர்க்கவுட் ஆகல

  பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மேலும், கேஜிஎஃப் 2 படத்துடன் மோதிய நிலையில், சொந்த மாநிலத்திலேயே ஏகப்பட்ட தியேட்டர்களை பறி கொடுக்கும் நிலை உருவானது. அதன் காரணமாக படத்திற்கு வர வேண்டிய வசூலும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. நெட்பிளிக்ஸ் வெளியான பிறகும் பீஸ்ட் படம் மாஸ் காட்ட முடியாமல் தமாஸாக முடிந்தது.

  ரஜினி படத்துக்கும் ஏன்

  ரஜினி படத்துக்கும் ஏன்

  அண்ணாத்தே என அழகான தமிழில் தலைப்பு வைத்து நடித்த ரஜினிகாந்தை வைத்து தலைவர் 169 படத்தை இயக்க தயாரான நெல்சன் அந்த படத்திற்கு ஏன் மீண்டும் ஜெயிலர் என ஆங்கில தலைப்பு வைக்க வேண்டும் என்கிற கேள்வியும், ஆங்கில தலைப்பு மோகம் இன்னமும் அவரை விடவில்லையா? என்கிற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் கிளம்பி உள்ளன.

  தமிழ் தலைப்புக்கு ஏன் தடை

  தமிழ் தலைப்புக்கு ஏன் தடை

  தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு வரி சலுகை வழங்கப்பட்ட நிலையில் ஏகப்பட்ட படங்கள் தமிழ் தலைப்பிலேயே வெளியாகின. ஆனால், தற்போது ஏகப்பட்ட ஆங்கில தலைப்புகள் உடன் தான் தமிழ் படங்கள் வெளியாகின்றன. பான் இந்தியா மோகம் தான் இதற்கு காரணமா? என்கிற கேள்வியும் எழுகிறது. விக்ரம் என தமிழில் தலைப்பு வைக்கப்பட்ட படம் வெளிநாடுகளில் வசூல் வேட்டை நடத்தவில்லையா? தமிழ் படங்களுக்கு ஏன் தமிழ் தலைப்பை இயக்குநர்கள் வைக்க மறுக்கின்றனர் என்றும் முன்னணி நடிகர்களும் அதற்கு ஏன் தடை போடுவதில்லை என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

  சரியா இருக்கும்

  சரியா இருக்கும்

  ஜெயிலர் தலைப்பை மாற்றி விட்டு வேறவொரு தலைப்பை தேர்வு செய்யும் பணியும் நடைபெற்றதாகவும், இயக்குநர் நெல்சனுக்கு இந்த தலைப்பு தான் கதைக்கு சரியாக கனெக்ட் ஆகும் என நினைத்த நிலையில், பல விவாதங்களுக்கு பிறகு தான் இந்த தலைப்பையே உறுதி படுத்தி உள்ளனர் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

  English summary
  After Doctor and Beast, Now another english tile Jailer chosen by Director Nelson choose stirs controversy and netizens raises so many questions.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X