சீக்கிரமே திருமணம் ஆகப்போகுது.. திடீரென தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார்.. எங்கே போயிருக்காரு பாருங்க!
சென்னை: நடிகர் தனுஷ் உடன் வரலட்சுமி சரத்குமார் இணைந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. நடிகர் தனுஷ் உடன் இணைந்து மாரி 2 படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், தனுஷ் உடன் சுற்றி வருகிறாரே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஐபிஎல் போட்டியை பார்க்க ஜோடி ஜோடியாக நடிகர்கள் மற்றும் நடிகைகள் என பலரும் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடக்கும் போதெல்லாம் கூடி விடுகின்றனர். சென்னையில் மட்டுமின்றி நாடு முழுவதும் எங்கே ஐபிஎல் போட்டி நடந்தாலும் அந்த ஊரை சேர்ந்த பிரபல நடிகர்கள் மைதானத்தில் தான் தவம் கிடக்கின்றனர்.

கடந்த ஆண்டு திரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட நடிகைகள் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதிஹாசன், யாஷிகா ஆனந்த், கிருத்திகா உதயநிதி, ஷாலினி அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், ஜெயம் ரவி, சதீஷ், ரவீனா தாஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசித்து வருகின்றனர்.
தனுஷ் உடன் வரலட்சுமி சரத்குமார்: அப்பா சரத்குமார் மற்றும் சித்தி ராதிகா சரத்குமார் இருவரும் அரசியலில் படுபிசியாகி உள்ளனர். பாஜகவுடன் இணைவதற்கு முன்னதாக தங்கள் சொந்த ஊரில் கோயில்களில் கும்பாபிஷேகம் செய்து ஏகப்பட்ட மக்களை கவர்ந்தனர். அதெல்லாம் ஓட்டுக்காகத்தான் என தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது. வரலட்சுமி சரத்குமாரும் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொண்டார். இந்நிலையில், தனுஷ் உடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார் தற்போது ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்துள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
மேட்ச்சை பாருங்க எங்களை பார்க்காதீங்க: சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 2வது போட்டியை நடிகர் தனுஷ் உடன் வரலட்சுமி சரத்குமார் கண்டு ரசித்தார். அப்போது, ரசிகர்கள் தனுஷையும் அவரையும் திரும்பி பார்த்துக் கொண்டே கூச்சலிட்ட நிலையில், மேட்ச்சை பாருங்க, எங்களைபார்க்காதீங்க என வரலட்சுமி சிக்னல் செய்தார்.
கிளம்பிப் போன தனுஷ்: ரசிகர்கள் தொடர்ந்து இருவரையும் பார்த்து கூச்சலிட்ட நிலையில், அங்கிருந்து உடனடியாக் தனுஷ் கிளம்பிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளன. நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தனுஷ் உடன் வரலட்சுமி சுற்றுகிறாரே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுதான் காரணம்: தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ராயன் படத்தில் வரலட்சுமி சரத்குமார் பல வருடங்கள் கழித்து தனுஷ் உடன் இணைந்து நடித்து வருகிறார். மாரி 2 படத்துக்குப் பிறகு தனுஷ் உடன் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள நிலையில், தான் இருவரும் கிரிக்கெட் போட்டியை நேரில் காண ஒன்றாக வந்துள்ளனர் எனக் கூறுகின்றனர்.
பல படங்கள்: ராயன், குபேரா, இளையராஜா பயோபிக் என தனுஷ் கைவசம் பல படங்கள் உள்ளன. மூன்று படங்களின் வேலைகளையும் தனுஷ் மாறி மாறி பார்த்து வரும் நிலையில், கிடைக்கும் கொஞ்ச ஓய்வு நேரத்தில் ஐபிஎல் போட்டியையும் பார்த்து வருகிறார். நடிகை வரலட்சுமி சரத்குமார் நிக்கோலாய் சச்தேவ் எனும் தொழிலதிபரை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட நிலையில், தேர்தல் எல்லாம் முடிந்த பின்னர் திருமணம் செய்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











