Don't Miss!
- News
மொட்டை மாடியில் ரொமான்ஸ்.. சட்டென வந்த காதலியின் தாய்.. பதறிப்போன மாணவன்.. அப்பறம் என்னாச்சு தெரியுமா
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
லக்ஷ்மி, கஸ்தூரியை லெப் அன்ட் ரைட் வாங்கியதன் எதிரொலி.. ட்ரெண்டிங்கில் வனிதா.. பறக்கும் மீம்ஸ்!
சென்னை: தனது திருமணம் குறித்து பேசிய பிரபலங்களை வெளுத்து வாங்கிய நிலையில் டிவிட்டரில் ட்ரென்டிங்கில் உள்ளார் வனிதா.
Recommended Video
நடிகை வனிதா கடந்த 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துக்கொண்டார். ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பால் தனது மனைவியான எலிசபெத் ஹெலனை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்துக்கொண்டார்.
இதனால் எலிசபெத் ஹெலன் போலீஸில் புகார் அளித்தார். அவருக்கு ஆதரவாக குட்டி பத்மினி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் யூடியூப் பிரபலம் சூர்யாதேவி ஆகியோர் குரல் கொடுத்தனர்.
நீயே ஒரு பிராடு.. கிழிப்பே நீ.. முதல்ல உன் புருஷன சேர சொல்லு.. கஸ்தூரியையும் கிழித்து விட்ட வனிதா!

நேர்காணல்..
இதனால் கடுப்பான வனிதா அவர்களை வாய்க்கு வந்தப்படி விளாசினார். வனிதாவின் பேச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் குட்டிபத்மினி மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் மன்னிப்பு கேட்டனர். இந்நிலையில் நேற்று ஊடகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட வீடியோ நேர்காணலில் வனிதாவும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.

கிழிக்கதாண்டி வந்திருக்கேன்
அதில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை அவளே இவளே என கண்டபடி பேசினார் வனிதா. நீ என்ன பத்தினியா? ஒரே ஒரு புருஷன் வச்சுருந்தா நீ ஒழுங்கா? உன்னை கிழிக்கதாண்டி இங்க வந்திருக்கேன். நீ யாருடி என்னைப் பற்றி பேச என தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.

கஸ்தூரி சப்போர்ட்
இதனால் நொந்துபோன லக்ஷ்மி, அவருடன் உரையாடலை தொடராமல் பாதியிலேயே தொடர்பை துண்டித்துக்கொண்டு சென்றார். அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்தார் வனிதா. இதனை பார்த்த கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணனை அவதூறாக பேசியதால் உங்களை கைது செய்யலாம் வனிதாவை விளாசி பதிவிட்டார்.

அல்லோகளப்படும் டிவிட்டர்
இதனை தொடர்ந்து தனது செகன்ட் இன்னிங்ஸை ஆரம்பிரத்தார் வனிதா. கஸ்தூரியையும் தரக்குறைவாக பேசி உலுக்கி விட்டார். வனிதா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோரின் சண்டையால் டிவிட்டர் வலைதளமே அல்லோகளப்பட்டு வருகிறது.
|
ஆல் இன் ஒன்
இந்த குடுமிப்பிடி சண்டையால் டிவிட்டரில் ட்ரென்டிங்கில் உள்ளார் வனிதா. அதோடு வகை வகையான மீம்ஸ்களும் பறக்கின்றன. அந்த வகையில் பெஸ்ட் இன்டர்வியூஸ் என முதல்வன் படத்தில் அர்ஜூன் - ரகுவரன் இன்டர்வியூ முதல் பல சினிமா இன்டர்வியூகளை க்ளாஸ் ஒன், மாஸ் ஒன், பெஸ்ட் ஒன், நேட்சுரல் ஒன் என்றும் வனிதா லக்ஷ்மி இன்டர்வியூவை ஆல் இன் ஒன் என்றும் குறிப்பிட்டு மீம் வெளியிட்டுள்ளனர்.
|
வீடியோ வேண்டும்
வனிதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கஸ்தூரி வீடியோ வெளியிட வேண்டும் என்றும் வடிவேலு நகைச்சுவையுடன் மீம் வெளிட்டுள்ளனர். அதாவது வடிவேல் காலையில் அப்பா அம்மாவை கடவுளுக்கு நிகராக வணங்கிவிட்டு மாலையில் குடித்துவிட்டு வந்து அடித்து நொறுக்கும் காமெடியை நினைவு படுத்தியுள்ளனர்.
|
வியூவர்ஸ் ரியாக்ஷன்
இன்னைக்கு ட்ரென்டிங் டாப்பிக் வனிதாவும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனும்தான் என விதவிதமான மீம்களை ஷேர் செய்துள்ளார் இந்த நெட்டிசன். மேலும் வியூவர்ஸ் ரியாக்ஷன் என விஐபி படத்தின் காட்சியை ஒப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.