கேபியை தொடர்ந்து இவர்...கொரோனாவால் பாதிக்கப்படும் பிக்பாஸ் தமிழ் பிரபலங்கள்
சென்னை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தடுப்பு மருந்து, ஆக்சிஜன், மருத்துவ வசதிகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாமானியர்கள், பிரபலங்கள் என்ற பாகுபாடின்றி கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும், அவர்களின் குடும்பத்தினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் உயிரிழந்துள்ளனர். திரையுலகை சேர்ந்த பலரும் கொரோனா நிவாரணத்திற்காக நன்கொடை அளித்தும், பல்வேறு உதவிகளை செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் கடந்த 4 சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. சமீபத்தில் தான் இந்த போட்டியில் பங்கேற்ற கேப்ரியாலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஆஜித்திற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் ஆஜித் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதில் அவர், எனக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தேவையான தடுப்பு மருந்துகளை எடுத்து வருவதாகவும் ஆஜித் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில், உங்களின் பிரார்த்தனையால் நான் நலமுடன் உள்ளேன். இந்த வார துவக்கம் வரை எந்த அறிகுறியும் இல்லாமல் தான் இருந்தது. நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதாக இருந்தால் பாதுகாப்பு வழிமுறைகளை தயவு செய்து பின்பற்றுங்கள். பாதுகாப்பாக இருங்கள். உலகம் விரைவில் சகஜ நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











