செல்லத்துக்கு வலிக்காதா.. 2 நாட்களாக டிரெண்டிங்கில் நயன்தாரா.. என்னதான் செய்தார் அப்படி?
சென்னை : கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. புதிதாக கொரோனா தொற்றிற்கு ஆளாவோர் எண்ணிக்கை சிறிது குறைந்தாலும், உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மற்ற மாநிலங்களைப் போல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு திரை பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதால் கோலிவுட் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அனைவரையும் ஊசி போட்டுக் கொள்ளும்படி வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோலிவுட்டின் மிக பிரபலமான காதல் ஜோடியான டைரக்டர் விக்னேஷ் சிவனும், லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாராவும் சென்னையில் நேற்று தடுப்பூசிப் போட்டுக் கொண்டனர். இந்த ஃபோட்டோவை சமூக வலைதளங்களில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வெளியிட்ட சிறிது நேரத்திலேயே ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்தது.
நயன்தாரா என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டது. அதில் பலரும், தலைவி நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்டார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்டார். நயன்தாரா தடுப்பூசிக் கொண்டார் அதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என கருத்து பதிவிட துவங்கி விட்டனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த ஹாஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இடம்பிடித்து வருகிறது.
மேலும் சிலர் நயன்தாரா நிஜமாகவே தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்ற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளனர். இதற்கு காரணம் அந்த ஃபோட்டோவில் விக்னேஷ் சிவன் பயப்படுவது போலவும், நயன்தாரா மிக சாதாரணமாக அமர்ந்திருப்பது போலவும் உள்ளது தான். அதிலும் நயன்தாராவிற்கு ஊசி போடும் நர்ஸ் கையில் ஊசி இருப்பது போன்றே தெரியவில்லை என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











