Dhurandhar 2 Tamil Version: துரந்தர் 2 தமிழ் டப்பிங் வெர்ஷன் ரெடி.. எப்போது முதல் திரையரங்கில் பார்க்கலாம்?

சென்னை: இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில் உருவாகி மார்ச் 19ஆம் தேதி வெளியான படம் துரந்தர் 2. இந்த படம் ஏற்கனவே வெளியான துரந்தர் படத்தின் இரண்டாவது பாகம். ரன்வீர் சிங் நடித்துள்ள இந்த படத்தைப் பார்த்த பலரும் தெரிவித்து வரும் விமர்சனம் கலவையானதாக இருப்பதால் படம் குறித்த பேச்சுக்கள் இந்திய அளவில் இருக்கிறது.

படம் மார்ச் 18ஆம் தேதி இரவில் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. இந்தியா முழுவதும் இந்தியில் தான் படம் திரையிடப்பட்டது. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் படத்தை டப் செய்து, அதை சென்சாருக்கு அனுப்பி சென்சார் பெறுவதற்கு கால தாமதம் ஆனதால், படத்தை பிராந்திய மொழிகளில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. ஆனால் படக்குழு வேண்டும் என்றேதான் இந்தியைத் திணிக்க துரந்தர் படத்தை இந்தியில் ரிலீஸ் செய்துள்ளார்கள் எனறு சிலர் விமர்சித்தனர்.

After Hindi Release Dhurandhar 2 Set for Tamil Release with Censor Clearance
Photo Credit:

இப்படி இருக்கும்போது, படத்தை தமிழில் டப் செய்து, முறையாக சென்சார் பெற்று அந்த சென்சார் சான்றிதழைப் பகிர்ந்துள்ளனர். படத்தை பிவிஆர் நிறுவனம் ரிலீஸ் செய்வதால், நாளை முதல் தமிழில் படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ் வெர்ஷனில் மொத்தம் 231. 38 நிமிடங்கள் படத்தின் ரன்னிங் டைமாக உள்ளது.

தமிழ் டப்பிங்: படம் இன்று இரவு காட்சிகள் வரை இந்தியில் தான் திரையிடப்படுகிறது. மேலும் படத்தின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் என்பதால் படத்தை தமிழ் வெர்ஷனில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் படத்தை அதன் ஒரிஜினல் வெர்ஷனனாக இந்தியிலும் வரும் நாட்களில் திரையிடப்படும் என்பதால் ஒரிஜினல் வெர்ஷனில் படத்தை பார்ப்பவர்களுக்கும் அது சௌகரியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

After Hindi Release Dhurandhar 2 Set for Tamil Release with Censor Clearance
Photo Credit:

பிரபலங்கள் விமர்சனம்: படத்தை ஏற்கனவே நடிகர்கள் ராம் சரண், அல்லு அர்ஜுன் போன்றவர்கள் பாராட்டினர். அதேபோல் நடிகை ரம்யா படம் ஒரு காட்டு மொக்கைப் படம், தியேட்டரில் பார்க்காதீர்கள், காட்சிக்கு காட்சி சிரிப்புதான் வருகிறது. முழுக்க முழுக்க போர் அடிக்கிறது. ஆஸ்கர் விருதை எல்லாம் விடுங்க, இந்த படத்துக்கு நோபல் பரிசே கொடுக்க வேண்டும் என்று காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் பல நெட்டிசன்கள் பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முட்டுக் கொடுத்து வைத்துள்ளார்கள் என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X