உடல்நிலை சீராக உள்ளது... ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்த கமலஹாசன்

சென்னை : சமீபத்தில் தனது கமல் ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனத்தின் துவக்கத்திற்காக சிகாகோ சென்று திரும்பிய கமலஹாசனுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்க நடத்தப்பட்ட மருத்துவ பரிசோனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதையும், மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதையும் கமலே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மரத்துவமனையில் கமல்

மரத்துவமனையில் கமல்

இந்நிலையில் கமலின் உடல்நிலை குறித்து திங்கள்கிழமை அன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கமலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது சுவாச குழாயில் லேசான நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நலம் விசாரித்த ரஜினி

நலம் விசாரித்த ரஜினி

இதற்கிடையில் கமல் விரைவில் குணமடைய அரசியல் தலைவர்கள், சினிமா பரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். ரஜினியும் கமலை போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

சீராக உள்ளது

சீராக உள்ளது

இந்நிலையில் கமலின் உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனை நிர்வாகம் மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளது. கமலஹாசனுக்கு தொடர்ந்து கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நோய் தொற்று தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என அதில் குறிப்பிடப்பட்துள்ளது.

கமலுக்கு மாற்றே கிடையாது

கமலுக்கு மாற்றே கிடையாது

கமலின் மகள் ஸ்ருதிஹாசனும், கமலஹாசன் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதாக கூறி உள்ளார். விஜய் டிவி.,க்கு நெருக்கமான வட்டாரங்களும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக யாரும் மாற்றப்பட போவதில்லை. அடுத்த 2 வாரங்களுக்கு வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.

டிரெண்டில் கமலஹாசன்

டிரெண்டில் கமலஹாசன்

இதனால் கமல் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக ட்விட்டரில் KamalHassan என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு, அது டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் நடத்திய ஃபோட்டோஷுட் காரணமாக அவர் ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X