Jailer Success - ஜெயிலர் சக்சஸ்.. கார் மட்டும் இல்லை.. கோல்டு காயினும் பரிசுதான்.. அசத்திய கலாநிதி மாறன்

சென்னை: Jailer Success (ஜெயிலர் சக்சஸ்) ஜெயிலர் படம் பிரமாண்ட வெற்றி பெற்றதை அடுத்து படக்குழுவினருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த மாதம் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக தடுமாறிக்கொண்டிருந்த ரஜினிக்கு நெல்சன் திலீப்குமாரும், பீஸ்ட்டில் விழுந்த நெல்சன் திலீப்குமாரை ரஜினிகாந்த்தும் ஒருவருக்கொருவர் கைகொடுத்து தூக்கியிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூறிவருகிறார்கள்.

 After Jailer became a huge success the film crew was awarded a gold coin

வசூலில் மெகா மாஸ்: படம் ரிலீஸாகி ஒரு வாரத்தின் முடிவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி ஒரு வார முடிவில் 375 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்தது. மேலும் இதுவரை 650 கோடி ரூபாயை வசூல் தாண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அமேசான் ப்ரைமிலும் கடந்த ஏழாம் தேதி ஜெயிலர் ரிலீஸாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கலாநிதி மாறன் பரிசு: இந்தச் சூழலில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டதால் கலாநிதி மாறன் பரிசுகளை அள்ளி கொடுத்துவருகிறார். அதன்படி ரஜினி வீட்டுக்கு சென்ற அவர் செக்கை கொடுத்து இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை காட்டி எது வேண்டுமோ எடுத்துக்கொள்ளும்படி பணித்தார். அதேபோல் நெல்சனிடமும், அனிருத்திடமும் சில கார்களை கலாநிதி காட்ட அவர்கள் போர்ஷே கார்களை பரிசாக பெற்றுக்கொண்டனர். ரஜினிக்கு கொடுத்தது போல் அவர்களுக்கும் செக் ஒன்றை பரிசாக கொடுத்தார். மீண்டும் இந்தக் கூட்டணி இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

படக்குழுவினருக்கு பரிசு: இந்தச் சூழலில் படத்த்தின் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளருக்கு மட்டும் கலாநிதி மாறன் பரிசு கொடுத்துவிட்டார். படத்தில் பணியாற்றிய மற்றவர்களுக்கு என்ன பரிசு கொடுக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. இந்நிலையில் அதற்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது.

என்ன பரிசு: அதன்படி இன்று ஜெயிலர் சக்சஸ் மீட் ஈவெண்ட் நடந்தது. பெரிய அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு படத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். கலாநிதி மாறன், ரஜினிகாந்த், மோகன் லால் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அதனையடுத்து படத்தில் பணியாற்றியவர்களுக்கு ஒரு தங்க நாணயமும், ஷீல்டும் பரிசாக கொடுக்கப்பட்டது. அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X