Rajinikanth Salary: ஜெயித்துக்காட்டிய ஜெயிலர்.. விஜய்க்கு போட்டியாக சம்பளத்தை உயர்த்திய ரஜினிகாந்த்!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் சரியாக போகாத நிலையில், ஜெயிலர் படத்துக்கு வெறும் 80 கோடி மட்டுமே ரஜினிகாந்துக்கு சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் முதல் வாரத்திலேயே 375 கோடி வசூலை தாண்டி ஒட்டுமொத்தமாக 500 கோடி வசூல் படமாக மாறியுள்ள நிலையில், அதிரடியாக அடுத்த படத்துக்கு தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார் சூப்பர்ஸ்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

After Jailer huge success Superstar Rajinikanth hikes his salary to 200 crores buzz trending

அதிலும், நடிகர் விஜய் சம்பளத்துக்கு போட்டியாக ரஜினிகாந்தின் சம்பளம் அதிகபட்சமாக 200 கோடி ரூபாயாக அதிகரித்து இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் சினிமா உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

நம்பி ஏமாந்த ரஜினி: கபாலி படம் ஓடிய அளவுக்கு மீண்டும் பா. ரஞ்சித் கூட்டணியில் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை. அதன் பின்னர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் பெரும் நம்பிக்கையுடன் தர்பார் படத்தில் நடித்த நிலையில், அந்த படமும் சொதப்பியது.

பேட்ட படத்துக்கு போட்டியாக வெளியான விஸ்வாசம் படம் ஹிட் அடித்த நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்த ரஜினிகாந்துக்கு அந்த படம் ஃபிளாப் ஆக ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார்.

ஜெயித்துக்காட்டிய ஜெயிலர்: அண்ணாத்த படம் அவுட்டான நிலையில், சன் பிக்சர்ஸ் மீண்டும் ரஜினிகாந்த் உடன் இணைந்த ஜெயிலர் படத்தில் அவருக்கான சம்பளத்தை குறைத்து வழங்கியதாக கூறப்படுகிறது.

100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி நடித்து வந்த ரஜினிகாந்த் ஜெயிலர் படத்துக்கு வெறும் 80 கோடி தான் வாங்கினார் என்றனர். ஆனால், ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வசூல் ஈட்டிய நிலையில், ரஜினிகாந்துக்கு ஒரு பெரிய தொகை ஷேராக கிடைத்திருக்கும் என்கின்றனர்.

200 கோடி சம்பளம்: ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள படத்துக்கு தனது சம்பளத்தை 200 கோடியாக உயர்த்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

After Jailer huge success Superstar Rajinikanth hikes his salary to 200 crores buzz trending

தலைவர் 170 படத்துக்கா அல்லது தலைவர் 171 படத்துக்கா என்கிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

விஜய்க்கு இணையாக: நடிகர் விஜய் தான் தென்னிந்திய சினிமாவிலேயே அதிகபட்சமாக 200 கோடி சம்பளத்தை தளபதி 68 படத்துக்காக வாங்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், அதற்கு இணையாக ரஜினிகாந்தும் சம்பளத்தை உயர்த்தப் போவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அதிகபட்சம் 300 கோடி வசூல் ஈட்டும் நடிகர் விஜய்யின் சம்பளமே 200 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், 500 கோடி வசூலை குவிக்கும் நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் 200 கோடியாக மாறாத என்றும் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X