அனிருத்துக்கு அடுத்தடுத்து 4 கார்களா?.. ஜெயிலர், ஜவான், லியோ, இந்தியன் 2 என எகிறும் லிஸ்ட்!
சென்னை: ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைத்த ராக்ஸ்டார் அனிருத்துக்கும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் போர்ஷ் கார் ஒன்றை நேற்று பரிசாக வழங்கியது ஒட்டுமொத்த திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூல் வேட்டையை நடத்திய நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு லாபத்தில் இருந்து செக் மற்றும் சொகுசு காரை கலாநிதி மாறன் வழங்கியுள்ளார்.

அனிருத்துக்கு சொகுசு கார் பரிசு: அதுவும் அனிருத்துக்கு மூன்று சொகுசு கார்களை நிறுத்தி அதில் ஒரு காரை தேர்வு செய்து கொள்ள கலாநிதிமாறன் சொல்லும் வீடியோ திரையுலகத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. அடுத்ததாக அனிருத் இசையில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஜெயிலர் திரைப்படத்தை விட ஜவான் திரைப்படம் அதிக வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அனிருத்துக்கு ஷாருக்கானும் ஒரு காரை பரிசாக வழங்குவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்கிற நிலையில், தயாரிப்பாளர் லலித் குமார் இந்த ஆண்டு அனிருத்துக்கு கலாநிதி மாறன் வழங்கியதைப் போல சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்குவாரா கேள்வியும் திரையுலகத்தில் எழுந்துள்ளது.
ஜவான், லியோ, இந்தியன் 2 வருது: சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் மிகப்பெரிய வசூல் வேட்டையை அடைந்த நிலையில் அந்தப் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரஜினிகாந்த் நெல்சன் மற்றும் அனிருத்துக்கு கார் வழங்கப்பட்ட நிலையில் லைகா தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்திற்கும் அனிருத்துக்கு கார் பரிசாக வழங்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இப்படி ஒரேயடியாக தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து அனிருத்துக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கினால் விரைவில் நான்கு பிரம்மாண்ட கார்கள் அனிருத்தின் கராஜில் அணிவகுத்து நிற்கும் என ரசிகர்கள் இப்பவே கணக்கு போட்டு விட்டனர். மேலும் இனிமேல் சொகுசு கார் கொடுத்தால் தான் அந்த படம் சூப்பர் ஹிட் என்கிற நிலைமைக்கு வந்து விடுமோ என்கிற தலைவலியும் தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தயாரிப்பாளர்களுக்கு தலைவலி: பொதுவாக இயக்குனர்களுக்கு மட்டும் தான் இது போன்ற கார்களை பரிசாக வழங்கி வந்த நிலையில் கலாநிதி மாறன் படத்தின் ஹீரோ இயக்குனர் மற்றும் இசையமைப்பாளருக்கு கார் வழங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து இதே பாணியை மற்ற தயாரிப்பாளர்கள் தொடர்வார்கள் அது வேறு விதமான பரிசுகளை வழங்க முன் வருவார்களா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.
எப்படி இருந்தாலும் ராக்ஸ்டார் அனிருத் காட்டில் அடுத்தடுத்து பண மலைகளும் கார் மலைகளும் பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக்கானின் ஜவான், விஜயின் லியோ, கமல்ஹாசனின் இந்தியன் 2 மட்டுமின்றி ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவாரம் படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications











