என்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா
Recommended Video

சென்னை: மூன்று பேர் குலேபகாவலி படத்தில் வரும் ஏ சொர்கமா பாடலுக்கு கால்பந்தை வைத்து டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது.
மோகன்லாலின் படத்தில் வந்த ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஷெரில் உள்ளிட்ட பெண்கள் ஆடிய வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் வெளியான குலேபகாவலி படத்தில் வரும் சொர்கமா பாடலுக்கு 3 வாலிபர்கள் நச்சுன்னு டான்ஸ் ஆடியுள்ளனர்.
3 பேரும் கால்பந்தை வைத்துக் கொண்டு அருமையாக நடனமாடியுள்ளனர்.
வைரல்
சொர்கமா பாடலுக்கு 3 பேர் கால்பந்தை வைத்துக் கொண்டு சூப்பராக டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.
எடிட்டிங்கா?
டான்ஸ் வீடியோவில் இருக்கும் 3 பேரும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். அது 3 பேரா இல்லை ஒருவர் ஆடி அதை எடிட்டிங்கில் சேர்த்துள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்த்தி
3 பேர் ஆடிய வீடியோவை பார்த்த நடிகை ஆர்த்தி ட்வீட்டியிருப்பதாவது, அடேங்கப்பா,,, வேற லெவல்பா நீங்க 3 கெட்டப்புகள் 3 ஜீனியஸ்.. அருமை... பிரபுதேவா அண்ணா பார்த்தீங்களா என்று கேட்டுள்ளார்.

பிரபுதேவா
சமூக வலைதளத்தை கலக்கி வரும் இந்த வீடியோவை இன்னும் பிரபுதேவா பார்க்கவில்லை போன்று. அவர் நடித்துள்ள லட்சுமி படம் வரும் 24ம் தேதி ரிலீஸாக உள்ளது. அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிரபுதேவா பிசியாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











