ஜோதிகாவின் விமர்சனம்.. திடீரென கத்தரிப்போட்ட கங்குவா டீம்.. இதெல்லாம் முன்பே பண்ணியிருந்தா?

சென்னை: கங்குவா படத்தின் புரமோஷனுக்கு நடிகை ஜோதிகா பெரிதாக கலந்துக் கொள்ளவில்லை. சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடையே விரிசல் வந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவ அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. ஆனால், ஜோதிகா பாலிவுட்டில் தன்னுடைய பட வேலைகளில் பிஸியாக இருந்த நிலையில், கங்குவாவை கண்டுகொள்ளவில்லை என்கின்றனர்.

ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் போரடிக்கும் காட்சிகளை குறைத்து தற்போது கங்குவா 2.0 படமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

kanguva suriya jyotika

இனிமேல் நீ வயசுக்கு வந்தால் என்ன வரலைன்னா என்ன? என நெட்டிசன்கள் நக்கலடிக்கும் விதமாக கண் கெட்ட பிறகு சூர்யா நமஸ்காரம் செய்கிறார் என கலாய்த்து வருகின்றனர்.

கோடிக்கணக்கில் நஷ்டம்னா கோபம் வராதா?: யாராக இருந்தாலும் பல கோடிகளில் முதலீடு செய்து ஒரு பிரம்மாண்ட படைப்பை தமிழர்களுக்காக ஐந்து வகை நிலங்களின் மாண்பை சொல்லும் விதமாகவும் 1070களில் ஒரு புதிய உலகத்தையே உருவாக்கி சினிமா ஸ்பெக்டாக்குலாக ஒரு படத்தைக் கொடுத்தால் அதன் முதல் அரை மணி நேரம் சரியில்லை என்பதற்காக படத்தை புறக்கணிக்கலாமா? என ஜோதிகா கொந்தளித்திருப்பது நியாயம் தான் என்றும் கோடிக்கணக்கில் பணம் நஷ்டம் அடைந்தால் இந்த கோபம் யாருக்குமே வரத்தான் செய்யும் என்றும் கூறுகின்றனர்.

கங்குவாவுக்கு கத்தரி: கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுஃப் கடைசி நேரத்தில் உயிரிழந்த நிலையில், படத்தின் எடிட்டிங் பணிகளை யார் பார்த்தார்கள் என்றே தெரியவில்லை என்றும் படத்துக்கு முன்னதாக போட வேண்டிய கத்தரியை தற்போது படம் வெளியாகி 4 நாட்களில் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்த பின்னர் முதலில் பிரான்சிஸ் ஆக சூர்யா வந்து திஷா பதானியுடன் ரொமான்ஸ் செய்வது, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லியின் கிரிஞ்ச் காமெடி உள்ளிட்ட போர்ஷனில் 12 நிமிடக் காட்சியை கத்தரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் படத்தின் காட்சிகளும் இதே போலத்தான் கத்தரிக்கப்பட்டன.

kanguva suriya jyotika

2வது வாரம் தப்பிக்குமா?: ஏற்கனவே தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் போட்ட இரைச்சல் சத்தத்தை 2 புள்ளிகள் குறைக்க தியேட்டர் ஓனர்களுக்கு ஞானவேல் ராஜா உத்தரவிட்ட நிலையில், தற்போது ஜோதிகாவே கடுமையாக விமர்சித்த முதலில் வரும் 12 நிமிடக் காட்சிகளை நீக்கியதற்கு முக்கிய காரணமே 2வது வார இறுதியிலாவது படத்தை ஓட வைக்க வேண்டும் என்கிற முயற்சி தான் என்கின்றனர். இதெல்லாம் முன்பே செய்திருந்தால் இந்நேரம் கங்குவா நல்ல படமாக வந்து மக்களால் கொண்டாடப்பட்டு கல்லாவும் கட்டியிருக்கும் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

சூர்யா 44 முக்கியம்: எதற்கும் துணிந்தவன், கங்குவா என அடுத்தடுத்து சூர்யாவின் படங்கள் தியேட்டரில் வெற்றி பெறாமல் போக காரணமே சூர்யா தியேட்டர்களை நம்பாமல் ஓடிடி பக்கம் சென்றது தான் எனக் கூறுகின்றனர். சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட தரமான படங்களை காத்திருந்து தியேட்டரில் வெளியிட்டு இருந்தாலே கங்குவா படத்துக்கு இந்த நிலை வந்திருக்காது என்கின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 படத்தின் எடிட்டிங் உள்ளிட்ட பணிகளை சூர்யா உன்னிப்பாக கவனித்து இப்போதே அனைத்தையும் சரி செய்து விட்டால் தான் படம் வெளியான பின்னர், இந்த பஞ்சாயத்து வராது எனக்கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X