கே பாலச்சந்தருக்கு பிறகு அந்த வேலையை செய்தவர் எஸ்எஸ் ராஜமவுலிதான்... ஜூனியர் என்டிஆர் புகழாரம்!

சென்னை: கே பாலச்சந்தருக்கு அடுத்தப்படியாக இரண்டு ஹீரோக்களை வைத்து இயக்கியிருப்பவர் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலிதான் என நடிகர் ஜூனியர் என்டிஆர் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகுபலி சீரிஸ் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து எஸ்எஸ் ராஜமவுலி இயக்கியிருக்கும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர்.ஆர்.ஆர்).

இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகை ஆலியா பட் உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா

இசை வெளியீட்டு விழா

பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

சிறப்பு பேருந்துகளில் வந்த ரசிகர்கள்

சிறப்பு பேருந்துகளில் வந்த ரசிகர்கள்

இந்த விழாவில் தெலுங்கு ரசிகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் நுற்றுக்கணக்கானோர் சிறப்பு பேருந்துகளில் வந்து விழாவில் பங்கேற்றனர். அவர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரின் படங்களை வைத்துக்கொண்டு ஆர்ப்பரித்தனர்.

சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன்

சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன்

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இரண்டு பெரிய ஹீரோக்கள் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு... முன்பு ரஜினி, கமல் படங்கள் பார்த்த அதே உணர்வு தற்போது எழுந்துள்ளது.

Recommended Video

Vijay, Dhanush &Sivakarthikeyan-னை Telugu industry-கு வரவேற்கிறோம் | RRR Jr.NTR Speech
கே பாலச்சந்தருக்கு பிறகு

கே பாலச்சந்தருக்கு பிறகு

இரண்டு பெரிய ஹீரோக்களை வைத்து அப்போது கே.பாலசந்தர் படம் இயக்கினார். தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இரண்டு ஹீரோக்களை வைத்து இயக்கி இருக்கிறார் என்று கூறினார். மேலும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகிறது அனைவரும் தியேட்டரில் வந்து பாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் ஜூனியர் என்டிஆர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X